`வீட்டைக்கட்டியாச்சு… கல்யாணமும் பண்ணியாச்சு! – கிராபிக் டிசைனர் பிரகதியைக் கரம் பிடித்த KPY தீனா!

விஜய் டிவியின் `கலக்கப் போவது யாரு’ நிகழ்ச்சி பலருக்கு பேவரைட். அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, தனது டைமிங் மற்றும் பாடி லாங்வேஜ் காமெடி மூலம் ரசிகர்களின் மனங்களைக் கொள்ளையடித்தவர் நடிகர் தீனா.

தீனா சினிமா, தொலைகாட்சிகள் மீதான ஆர்வத்தால் சென்னைக்கு வந்தவர். தொடக்கத்தில் ‘கலக்கப் போவது யாரு’ நிகழ்ச்சியில் உதவி இயக்குநராக சில ஆண்டுகள் பணிபுரிந்திருக்கிறார். அதன் பிறகுதான் கலக்கப்போவது யாரு நிகழச்சியில் போட்டியாளராகக் கலந்துகொண்டு பிரபலமாகியிருக்கிறார். நிகழ்ச்சியில் அவரது திறமையைப் பார்த்து அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் வரத் தொடங்கின. பவர் பாண்டி, கைதி, மாஸ்டர் என படங்களிலும் நடிக்கத் தொடங்கினார்

தீனா – பிரகதியுடன் சரத்

இன்று காலை தீனாவுக்கும் பிரகதி என்பவருக்கும் திருமணம் நடந்திருக்கிறது. பிரகதி கிராபிக் டிசைனராகப் பணிபுரிகிறார். திருமணம் காலை பட்டுக்கோட்டையில் நடந்திருக்கிறது. மணப்பெண்ணின் சொந்த ஊரும் பட்டுக்கோட்டைதான். உறவினர்கள் மட்டும் திருமணத்தில் கலந்து கொண்டனர். டிவி, சினிமா பிரபலங்கள் இம்மாதம் 10ம் தேதி சென்னையில் நடக்கும் வரவேற்பில் கலந்து கொள்விருக்கிறார். `கலக்கப்போவது யாரு’ சரத் மட்டும் பட்டுக்கோட்டை திருமணத்திலும் கலந்து கொண்டார். அவரிடம் பேசியபோது, `நான் அவன் குடும்பத்துல ஒருத்தன் பாஸ். கல்யாணத்துக்கு வரலைன்னா அப்படியே போயிடுன்னு சொல்லிடுவான்’ என்றார் சரத். சமீபத்தில்தான் தன் சொந்த ஊரில் வீடு கட்டியிருக்கிறார் தீனா. அப்போது பலரும் திருமணம் எப்போது எனப் பதிவிட்டிருந்தனர். தற்போது திருமணமும் நடந்திருக்கிறது. கமென்ட்டில் தீனாவுக்கு வாழ்த்துகளைத் தட்டிவிடுங்கள் மக்களே!

வாழ்த்துகள் தீனா – பிரகதி

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.