ஹேய்.. \"அந்த\" கண்ணை பாத்தீங்களா.. வடகொரியா அதிபர் நிலைமை ரொம்ப மோசம்.. 140 கிலோவா?.. கலங்கும் மக்கள்

பியொங்யாங்: திடீர்னு வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் குறித்த அதிர்ச்சி செய்தி ஒன்று வெளியாகி கடும் அதிர்ச்சியை அந்நாட்டு மக்களுக்கு ஏற்படுத்தி வருகிறது.

உலகின் சர்வாதிகார நாடுகளில் ஒன்று வடகொரியா.. இது ஒரு வித்தியாசமான நாடு.. இதைவிட வித்தியாசமானவர் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன்.. 39 வயதாகிறது.

அடிக்கடி அவருக்கு உடம்பு சரியில்லாமல் போய்விடும்.. அடிக்கடி காணாமல் போய்விடுவார்.. எங்கே இருக்கிறார் என்றே யாராலுமே கண்டுபிடிக்க முடியாது.. அதிபரை காணோமே என்று மக்கள் பதறி கொண்டிருந்தால், அவரே ஒருநாள் திடீர்னு மக்கள் முன்பு தோன்றுவார்.. மறுபடியும் காணாமல் போய்விடுவார்.

திடீர் மாயம்: இப்படித்தான் ஒருமுறை காணாமல்போய் மறுபடியும் திரும்பி வந்தபோது உடல் எடை கூடியிருந்தார்.. ஆளே அடையாளம் தெரியாமல் இருந்தது.. இத்தனைக்கும் அந்த நாட்டில் பெரும் பஞ்சம் அந்த சமயத்தில் ஏற்பட்டிருந்தது.. வறுமை சூழ்ந்திருந்தது.. ஏராளமான பொருளாதார சிக்கல்கள், பொருளாதாரத் தடை, உணவுப் பஞ்சம் என வரிசைக்கட்டி நின்றன..

மக்கள் கதிகலங்கி கிடந்தபோது, கிம் ஜாங் உன் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவருக்கு நிறைய நோய்கள் உடம்பில் குடியேறி விட்டதாகவும் தகவல்கள் பரவின.. இதையெல்லாம் கேட்டு, மக்கள் மேலும் கலங்கினார்கள்.. அப்போது மறுபடியும் கிம் ஜாங் உன் மக்கள் முன் தோன்றினார்.. அவர் எங்கும் காணாமல் போகவில்லையாம்.. உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தாராம்..

புலனாய்வுத்துறை: அதாவது ஆரம்பத்தில் 140 கிலோவில் இருந்திருக்கிறார்.. பிறகு டயட்டில் இருந்து, 20 கிலோ குறைத்து, 120 கிலோவுக்கு கஷ்டப்பட்டு உடல் எடையை கொண்டு வந்தாராம்.. இதை அந்நாட்டின் புலனாய்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

அதுமட்டுமல்ல, கிம் எப்போதுமே மாட்டுக்கறியைதான் ரசித்து சாப்பிடுவார்.. ஆனால், இவர் டயட்டில் உள்ளதாலோ என்னவோ, 2025ம் ஆண்டு வரை மக்கள் குறைவாக சாப்பிட வேண்டும், பஞ்சம் நீங்கும்வரை மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.. ஏற்கனவே ஒருமுறை கொரோனாவால் வடகொரிய மக்கள் வறுமையில் தவித்தபோது, ஒரே ஒரு வாழைப்பழம் சாப்பிடுங்கள் என்று சொன்னவர்தான் இந்த கிம்..!

உளவுத்துறை: இப்போது விஷயம் என்னவென்றால், மறுபடியும் வெயிட் போட்டுவிட்டாராம் கிம்.. ஆளும் கட்சியின் எம்எல்ஏவும், நாடாளுமன்ற உளவுத்துறைக் குழுவின் நிர்வாக செயலாளருமான யோ சாங் பும் என்பவர்தான், கிம் ஜாங் உன் பற்றி சில முக்கிய தகவல்களை செய்தியாளர்களிடம் சொல்லி உள்ளார்.

சிகரெட்டுகள்: அதாவது, “வெளிநாடுகளில் இருந்து அதிக புகையிலை, சிகரெட், நொறுக்குத்தீனிகள் இறக்குமதி செய்யப்படுகிறது.. குடிப்பழக்கம், புகை பிடிக்கும் பழக்கம், ஒழுங்கற்ற உணவு பழக்கத்திற்கு கிம் அடிமையாகி உள்ளார்.. கிம்மிற்கு 39 வயதாகும் நிலையில் அவர் உட்பட வடகொரியாவின் பல அரசு அதிகாரிகள் தூக்கமின்மை காரணமாக அவதிப்பட்டு வருகிறார்கள்.

வடகொரியா சமீபத்தில் மார்ல்போரோ உள்ளிட்ட பிராண்டுகளிலிருந்து அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டு சிகரெட்டுகளையும், பாரம்பரியமான மது வகைகளையும் இறக்குமதி செய்வதாக தகவல் வெளியாகியிருக்கிறது.. மேலும், அதிபர் கிம் ஜாங் உன்னின் சமீபத்திய போட்டோக்களும் வெளியாகி உள்ளன..

அந்த போட்டோவில், செயற்கை நுண்ணறிவு (AI) பகுப்பாய்வின்படி, அவரது எடை அதிகரித்திருப்பதாக தெரிகிறது. சுமார் 140 கிலோவுக்கு மேல் இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டிருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்..

தூக்கமின்மை: அமெரிக்கா இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளது.. அந்நாட்டின் பிரபல சேனல் ஒன்றில், கிம் ஜாங் பற்றின செய்தியை வெளியிட்டுள்ளது. “வடகொரிய அதிபர், அநேகமாக தூக்கமின்மை நோயினால் பாதிக்கப்பட்டிருக்கலாம்.. நிக்கோடின், ஆல்கஹால் போன்றவற்றை அதிகமாக எடுத்திருப்பதாகவும் தெரிகிறது. மேலும், தூக்கமின்மை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளையும் இறக்குமதி செய்திருக்கும் விவரங்களும் சிக்கியிருக்கின்றன..

மே 16 அன்று, மக்கள் மத்தியில் கிம் ஜாங் உன் தோன்றியபோது அவர் கண்களை பார்த்தீங்களா? கண்களை சுற்றி தெளிவான கருவளைய வட்டங்கள் இருந்தன… மிகவும் களைப்பாகவும், சோர்வாகவும் தோன்றினார். தூக்கமின்மை சிகிச்சைக்காக சோல்பிடெம் போன்ற மருந்துகளை பயன்படுத்துகிறார் என்ற தகவலும் கசிந்துள்ளது” என்றெல்லாம் அந்த டிவியில் செய்தி வெளியாகி உள்ளது..

என்ன காரணம்: ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் உதவியுடன் வடகொரிய அதிபர் கிம்மின் உடல் எடையை கணித்துள்ள தென்கொரியா அவரது உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாக தெரிவித்துள்ளது.

இப்படி பல்வேறு யூகங்கள் வலம் வரும்நிலையில், கிம் ஜாங் இப்போது எப்படி இருக்கிறார் என்று தெரியவில்லை.. தன் மக்களை ஒரே ஒரு வாழைப்பழம் சாப்பிட சொல்லிவிட்டு இவர் மட்டும் வெயிட் போட்டுவிட்டாரா? என்று இணையத்தில் விமர்சனங்கள் குவிய ஆரம்பித்துள்ளன.

நிஜமாகவே கிங், வெயிட் போட்டுவிட்டாரா? தூக்கமின்மையால் சிக்கி உள்ளாரா? எதுவுமே தெரியவில்லை.. அவராகவே மக்கள் முன்பு மறுபடியும் தோன்றி, தன் உடல்நிலை பற்றி சொன்னால்தான் உண்டு.. அதுவரை வழக்கம்போல், வடகொரிய பரபரப்புகள் றெக்கை கட்டி பறந்துகொண்டேயிருக்கும் போல..!!

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.