“2026-ல் அண்ணாமலை தலைமையில் ஆட்சி; சட்டமன்றத்திலும் செங்கோல்(?)" – சொல்கிறார் வி.பி.துரைசாமி

மதுரை வந்திருந்த தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் வி.பி.துரைசாமி செய்தியாளர்களிடம் பேசும்போது, “224 ஏக்கரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை இந்தியாவிலயே பெரியது. கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்குவதில் எந்த அரசியல் பாகுபாடும் இல்லை. பணிகள் தொடங்கி விட்டன.

வி.பி.துரைசாமி

மேக்கேதாட்டூ அணை விவகாரத்தில் தமிழக பா.ஜ.க ஆரம்பத்திலிருந்தே எதிர்ப்பாகத்தான் உள்ளது. ஆனால், கர்நாடக தேர்தல் வாக்குறுதியில் மேக்கேதாட்டூ அணையை கட்டுவோம் என வாக்குறுதி கொடுத்து வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியின் பதவியேற்பு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டது பா.ஜ.க-வுக்கு வருத்தம்.

தமிழக விவசாயிகளின் நிலையை எண்ணி பார்க்கமால் கர்நாடக காங்கிரஸ் பதவியேற்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டுள்ளார்.

அண்ணாமலை

நூறாண்டு கால பிரச்னையாக உள்ளது காவிரி. மேக்கேதாட்டூ அணை கட்டினால் கபினிக்கும், காவிரிக்கும் தண்ணீர் வராது, தமிழகத்திற்கு தண்ணீர் வராமல் வறண்டு விடும். தமிழக விவசாயகளின் உரிமையை, நன்மையை, அவர்களின் மேம்பாட்டுக்கான உரிமையை பெற்றுத்தர அண்ணாமலை நடவடிக்கை எடுப்பார்.

மல்யுத்த வீரர்கள் கொடுத்த புகாரில் உரிய பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனை விசாரித்து நடவடிக்கை எடுக்க நீதிமன்றமும் காவல்துறையும் உள்ளது. ஆனால் வீராங்கனைகளும், வீரர்களும் கட்டளை பிறப்பிக்கிறார்கள். குற்றவாளிக்கு சாதமாக, ஆதரவாக செயல்பட வேண்டிய அவசியம் பா.ஜ.க-வுக்கு இல்லை.

வி.பி.துரைசாமி

முதல்வர் வெளிநாடு சென்றதில் பா.ஜ.க-வுக்கு பொறாமை இல்லை, மகிழ்ச்சிதான். ஆனால், என்ன முதலீடுகளை ஈர்த்தார், எவ்வளவு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதை அவர் தெரியப்படுத்த வேண்டும். அப்போதுதான் முதல்வரின் பயணம் வெற்றியா தோல்வியா என்பது தெரியும்.

பா.ஜ.க பிற கட்சி விஷயங்களில் தலையிடுவதில்லை. அ.தி.மு.க எங்களுக்கு கூட்டாளியாக உள்ளது. செங்கோல் என்பது நல்லாட்சியின் அடையாளம். 2026-ல் தமிழகத்தில் புதிய ஆட்சி அண்ணாமலை தலைமையில் மலரும். அப்போது செங்கோலை தமிழக சட்டமன்றத்தில் வைப்பது குறித்து அண்ணாமலை முடிவெடுப்பார்.” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.