இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
ஜூன் மாதம் பிறந்துவிட்டது என தளபதி விஜய்ரசிகர்கள் கொண்டாட்டத்தை துவங்கிவிட்டார்கள். விஜய்யின் பிறந்தநாள் மாதம் என்று மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் தளபதியன்ஸ். இது விஜய் ரசிகர்களுக்கு மட்டும் அல்ல பிற நடிகர்களின் ரசிகர்களுக்கும் கொண்டாட்டமான மாதம் தான்.
ரசிகரின் வீட்டிற்கு ஆட்டோவில் சென்ற சூரி
அந்த கொண்டாட்டத்திற்கு காரணம் தங்களுக்கு பிடித்த நடிகர்களின் படங்கள் குறித்து வெளியாகவிருக்கும் அப்டேட்டுகள். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் ஜெயிலர் படம் ஆகஸ்ட் மாதம் ரிலீஸாகவிருக்கிறது. இந்நிலையில் அந்த படத்தின் முதல் பாடல் ஜூன் மாதம் வெளியாக உள்ளது.
அனிருத் இசையில் அந்த பாடல் கண்டிப்பாக வேற லெவலில் தான் இருக்கும்.
அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்தின் ஷூட்டிங் விரைவில் நிறைவடையவிருக்கிறது. அந்த படம் அக்டோபர் மாதம் 19ம் தேதி ரிலீஸ் ஆகவிருக்கிறது. இந்நிலையில் விஜய்யின் பிறந்தநாளுக்கு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் போஸ்டர் வெளியட திட்டமிட்டுள்ளனர்.
மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடிக்கவிருக்கும் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் ஜூன் முதல் வாரத்தில் துவங்கவிருக்கிறது. லைகா நிறுவனம் தயாரிக்கும் அந்த படத்தில் அஜித் குமாருக்கு ஜோடியாக நடிக்கிறார் த்ரிஷா.
அஜித்தை இம்பிரஸ் செய்த விடாமுயற்சி இயக்குநர் மகிழ்திருமேனி..எனக்கு அவ்ளோலாம் தேவையில்ல..
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி உள்ளிட்டோர் நடித்து வரும் கங்குவா படத்தின் ப்ரொமோ வீடியோ இந்த மாதம் வெளியாகவிருக்கிறது. சிறுத்தை சிவா அப்டேட் கொடுக்கிறார் என்றால் அது ஸ்பெஷல் தான்.
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் கேப்டன் மில்லர் படம் பற்றி தான் அனைவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். கேப்டன் மில்லருக்காக ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு மாறிவிட்டாரே தனுஷ் என அனைவரும் பேசுகிறார்கள். இந்நிலையில் கேப்டன் மில்லர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும், ரிலீஸ் தேதியும் இந்த மாதம் வெளியாகவிருக்கிறது.
சிவகார்த்திகேயனின் மாவீரன் பட பாடல்கள் மற்றும் டீஸர் வெளியாகப் போகிறது. மேலும் அவரின் அயலான் பட டீஸரும் வருகிறது. அதனால் டபுள் ட்ரீட் என்று துள்ளிக் குதிக்கிறார்கள் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்.
சீயான் விக்ரமின் துருவ நட்சத்திரம் பட ட்ரெய்லர் வரவிருக்கிறது. பெரிதும் எதிர்பார்க்கப்படும் படம் அது என்பது குறிப்பிடத்தக்கது. கவுதம் மேனன் இயக்கியிருக்கும் அந்த படம் எப்பொழுது தான் வரும் என்று ரசிகர்கள் தவமாய் தவமிருக்கும் நேரத்தில் ட்ரெய்லர் வருகிறது. கார்த்தியின் கார்த்தி 26 படம் குறித்த அறிவிப்பை வெளியிடவிருக்கிறார்கள்.
ஒரு அப்டேட் வந்தாலே சினிமா ரசிகர்கள் குஷியாகிவிடுவார்கள். அப்படி இருக்கும்போது ஏகப்பட்ட அப்டேட்டுகள் வரவிருப்பதால் ரசிகர்களின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
இதற்கிடையே லியோ பட வேலை முடியும் முன்பே விஜய்யின் அடுத்த படமான தளபதி 68 குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டனர். வெங்கட் பிரபு இயக்கும் தளபதி 68 படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
Thalapathy 68: 10 மாசமா விஜய் பற்றிய ரகசியத்தை காப்பாற்றிய வெங்கட் பிரபு
10 மாதங்களுக்கு முன்பே இந்த கூட்டணி உறுதியாகிவிட்டது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை வாய் திறக்கக் கூடாது என்று வெங்கட் பிரபுவிடம் கறாராக கூறிவிட்டாராம் விஜய். அண்ணா பேச்சுக்கு மறு பேச்சு ஏது என்று 10 மாதமாக அமைதியாக இருந்திருக்கிறார் வெங்கட் பிரபு.