இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
தமிழ் சினிமாவில் மளமளவென வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் தான் சிவகார்த்திகேயன். மெரினா படத்தின் மூலம் அறிமுகமான சிவகார்த்திகேயன் தொடர்ந்து வெற்றிப்படங்களாக கொடுத்து வந்தார். ரஜினி மற்றும் விஜய்யை போல கமர்ஷியல் பார்முலாவை கையிலெடுத்து வயது வித்தியாசமின்றி ரசிகர்களை சம்பாதித்தார் சிவகார்த்திகேயன்.
இருப்பினும் சிவகார்த்திகேயன் ஒரே மாதிரியான படங்களில் நடித்து வருகின்றார் என அவர் மீது விமர்சனங்கள் எழுந்தன. மேலும் அவர் நடித்த படங்கள் தொடர்ந்து தோல்வியையும் சந்தித்தன. எனவே இனி வித்யாசமான கதைக்களங்களை கொண்ட படங்களில் நடித்தால் தான் வேளைக்கு ஆகும் என எண்ணிய சிவகார்த்திகேயன் தற்போது அதன்படி செயல்பட்டு வருகின்றார்.
Lal Salaam: லால் சலாம் பிறகு பிரபல கிரிக்கெட் வீரரின் வாழ்க்கையை படமாக எடுக்கும் ஐஸ்வர்யா ? நடந்தா நல்லாத்தான் இருக்கும்..!
அந்த வகையில் மண்டேலா என்ற தேசிய விருது பெற்ற அஸ்வினின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்து முடித்துள்ளார் சிவகார்த்திகேயன். தற்போது இப்படத்தின் டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஜூலை 14 ஆம் தேதி இப்படம் திரையில் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து ராஜ்
கமல்
பிலிம்ஸ் சார்பாக கமல் தயாரிக்கும் ஒரு படத்தில் ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கத்தில் நடித்து வருகின்றார் சிவகார்த்திகேயன்.
அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்
ஒரு ராணுவ வீரரின் வாழ்க்கையை பற்றிய படமாக இது உருவாகி வருகின்றது. குறிப்பாக இப்படம் சிவகார்த்திகேயனின் திரைவாழ்க்கையிலேயே மிக முக்கியமான படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் ரவிக்குமாரின் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் நடிப்பில் உருவாகி வரும் அயலான் திரைப்படம் ஒருவழியாக தீபாவளி பாண்டியாகியை முன்னிட்டு திரையில் வெளியாக இருக்கின்றது.
கடந்த 2016 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இப்படம் பல காரணங்களால் தாமதமாகிக்கொண்டே சென்றது. இதைத்தொடர்ந்து தற்போது தீபாவளி பண்டிகைக்கு இப்படம் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சைன்ஸ் பிக்ஷன் ஜானரில் வித்யாசமாக உருவான இப்படம் ரசிகர்களை வெகுவாக ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலாக காத்துக்கொண்டிருக்க அதைப்பற்றிய தகவலை தற்போது இப்படத்தின் இயக்குனர் ரவிக்குமார் கூறியுள்ளார்.
அதாவது அயலான் படத்தின் டீசர் மாவீரன் படம் வெளியான பின்னரே தான் வருமாம். இதனை சமீபத்திய பேட்டி ஒன்றில் ரவிக்குமார் கூறியுள்ளார். இந்நிலையில் மாவீரன் திரைப்படம் திரையில் வெளியாகும் போது அதனுடன் அயலான் டீசரும் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் தற்போது இயக்குனரே மாவீரன் படம் வெளியான பின்னரே தான் அயலான் டீசர் வெளியாகும் என கூறிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.