கொலோராடோ: விமானப்படை வீரர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திடீரென தடுமாறி கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அமெரிக்காவின் கொலரோடா மாகாணத்தில் விமானப்படை பயிற்சி முடித்தவர்களுக்கு பட்டம் வழங்கும் விழா நடந்தது. இதில் பங்கேற்க வந்தார் அமெரிக்க அதிபர் ஜோபைடன்.,81 அவரை பேச நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அழைப்புவிடுத்தனர். உடனே பேச எழுந்தார் பைடன். அப்போது கால் இடறி கீழே விழுந்தார்.
உடனே அருகே இருந்த விமானப்படை வீரர்கள் அவரை கைத்தாங்கலாக தூக்கினர். இதன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த சம்பவத்தின் போது அவருக்கு காயம் ஏற்படவில்லை எனவும் நலமாக இருப்பதாக வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
இதே போன்று கடந்த 2012-ம் ஆண்டு வஷிங்டனில் இருந்து அட்லாண்டாவுக்கு செல்லக சிறப்பு விமானத்தில் ஏற முயன்றபோது மூன்று முறை தடுமாறி கீழே விழுந்தார். சுதாரித்து எழுந்த அவர் பயணத்தை தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement