China on the road to Russia: The second hole in the Earths surface | ரஷ்யா பாதையில் சீனா : பூமியின் மேற்பரப்பில் இரண்டாவது துளை

பெய்ஜிங் : நம் அண்டை நாடான சீனா, பூமிக்கு அடியில் புதிய எல்லைகளை ஆராயும் விதமாக, பூமியின் மேற்பரப்பில் இருந்து, 10 ஆயிரம் மீட்டர் (32,808 அடி) வரை, துளையிடும் பணியை துவக்கி உள்ளது.

சீன அதிபர் ஜிஜின்பிங், கடந்த 2021ம் ஆண்டு, நாட்டின் முன்னணி விஞ்ஞானிகளிடம் பேசியபாது, பூமியின் அடிப்பகுதியை ஆய்வு செய்வதில், நாம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைய வேண்டும் என, தெரிவித்து இருந்தார்.

இதன்படி, மே.,30ம் தேதி, எண்ணெய் வளம் மிக்க, ஜின்ஜியாங் பகுதியில், இப்பணிகள் துவங்கியதாக, அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதுகுறித்த அறிக்கையில்,‛ பூமியின் மேற்பரப்பில் துளையிடும் பணிகள், 10க்கும் மேற்பட்ட கண்ட அடுக்குகள் அல்லது பாறை அடுக்குகளில் ஊடுருவி, பூமியின் மேலோட்டத்தில் உள்ள கிரெட்டேசியஸ் அமைப்பை அடையும். இது, சுமார் 145 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய பாறையைக் கொண்டுள்ளது,’ எனக்கூறப்பட்டுள்ளது.

இந்த ஆய்வுகள் கனிம மற்றும் ஆற்றல் வளங்களை அடையாளம் காணவும், நிலநடுக்கம் மற்றும் எரிமலை வெடிப்புகள் போன்ற சுற்றுச்சூழல் பேரழிவுகளின் அபாயங்களை மதிப்பிடவும் உதவும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

latest tamil news

இதற்கு முன்பு, பூமியில் மனிதனால் உருவாக்கப்பட்ட, ஆழமான துளை முந்தைய சோவியத் யூனியனில், ரஷ்யாவின் மர்மன்ஸ்கில் பகுதியில், பேரண்ட்ஸ் கடலுக்கு அருகே உள்ளது.

1970ம் ஆண்டு துவங்கிய, இந்த துளையிடும் பணிகள், 1989ல் முடிவடைந்தது. இது, கோலா சூப்பர் டீப் போர்ஹோல் என, அழைக்கப்படுகிறது. மொத்தம், 20 ஆண்டுகளில், 12,262 மீட்டர் (40,230 அடி) ஆழத்துக்கு, இந்த துளை அமைக்கப்பட்டது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.