வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: டெஸ்லா மற்றும் டுவிட்டர் நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க், உலக பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.
இந்த பட்டியலில் முன்னர், முதலிடத்தில் இருந்த அர்னால்ட் பெர்னார்ட்டின் எல்விஎம்ஹெச் பங்குகளின் விலை சரிவு காரணமாக எலான் மஸ்க் முதலிடத்திற்கு வந்தார்.
எல்விஎம்ஹெச் பங்கின் மதிப்பில் சுமார் 2.6 சதவீதம் நேற்று சரிந்துள்ளது. இதனால், பெர்னார்ட் அர்னால்டின் சொத்து மதிப்பில் ஒரே நாளில் சுமார் 11 பில்லியன் டாலர்களை இழந்துள்ளார்.
தற்போது 192 பில்லியன் டாலர்களுடன் எலான் மஸ்க் முதலிடத்தில் உள்ளார். இதற்கு அடுத்து பெர்னார்ட் அர்னால்ட் 187 பில்லியன் டாலர்களுடன் 2வது இடத்தில் உள்ளார்.
2022 டிச., மாதம் டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் சரிவை சந்தித்த நேரத்தில், உலக பணக்காரர்கள் பட்டியலில் எலான் மஸ்க் 2வது இடத்திற்கு பின் தங்கினார். அர்னால்ட் பெர்னார்ட் முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement