ஐபோன் 14 விலைக் குறைப்பு: ஐபோன் பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தி!! ஆப்பிள் ஐபோன் 15 சீரிஸ் சந்தைக்கு வர இன்னும் சிறிது காலம் உள்ளது. நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பரில் ஒரு பெரிய நிகழ்வை நடத்துகிறது. இந்த நிகழ்வில் புதிய ஐபோன் தொடர்களை அறிமுகப்படுத்துகிறது. புதிய சீரிஸ் வந்தவுடன் பழைய சீரிஸ் ஐபோனின் விலை குறைக்கப்படுகிறது. ஆனால் 15 தொடர்கள் வருவதற்கு முன்பே, ஐபோன் 14 இன் விலைகள் குறைந்துள்ளன.
சுமார் 80 ஆயிரம் ரூபாய் கொண்ட ஐபோன் 14 ஐ 35 ஆயிரம் ரூபாயை விட குறைவான விலையில் வாங்கலாம். இந்த விவரத்தை பற்றி கேள்விப்பட்ட ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். ஐபோன் 14 -ஐ இவ்வளவு குறைந்த விலையில் எப்படி வாங்குவது என இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
iPhone 14: சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள்
ஐபோன் 14 இன் வெளியீட்டு விலை ரூ. 79,900 ஆகும். எனினும், அதை ஆன்லைன் விற்பனைத் தளமான பிளிப்கார்ட்டில் குறைந்த விலையில் வாங்கலாம். பிளிப்கார்ட்டில் இதற்கு 11% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. இந்த தள்ளுபடியுடன் இந்த ஐபோனை ரூ.70,999 -க்கு வாங்கலாம். அதாவது இந்த போனில் முழுமையாக ரூ. 8,901 தள்ளுபடி கிடைக்கிறது.
தள்ளுபடிகள் இதோடு நிற்கதில்லை. இந்த ஐபோனை வாங்கினால், பிளிப்கார்ட்டில் பல வங்கி மற்றும் பரிமாற்ற சலுகைகளும் கிடைக்கின்றன. இதன் காரணமாக தொலைபேசியின் விலை இன்னும் குறைகின்றது. இந்த சலுகளை பயன்படுத்தி இதில் இன்னும் அதிக தள்ளுபடியை பெற முடியும்.
iPhone 14: வங்கிச் சலுகை
ஐபோன் 14 ஐ வாங்க எச்டிஎஃப்சி (HDFC) -யின் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால், வாடிக்கையாளர்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி கிடைக்கும். அதன் பிறகு போனின் விலை ரூ.66,999 ஆக குறையும். இது மட்டுமல்லாமல் இந்த ஐபோனை வாங்க பிளிப்கார்ட் மூலம் ஒரு எக்ஸ்சேஞ் சலுகையும் அளிக்கப்படுகின்றது.
iPhone 14: எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்
ஐபோன் 14ல் 33 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான எக்ஸ்சேஞ்ச் ஆஃபர், அதாவது பரிமாற்ற சலுகை கிடைக்கின்றது. வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய ஸ்மார்ட்ஃபோனை மாற்றிக் கொண்டால், இவ்வளவு தள்ளுபடி கிடைக்கும். ஆனால் இந்த சலுகையை பயன்படுத்திக்கொள்ள தங்கள் பழைய போனின் விலை நன்றாக இருப்பதையும், அது லேட்டஸ்ட் மாடலாக இருப்பதையும் வாடிக்கையாளர்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே இந்த சலுகை வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும்.
இந்த சலுகையின் முழு பலனையும் வாடிக்கையாளர்கள் பெற முடிந்தால். 33 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பெரிய தள்ளுபடி கிடைக்கும். அதன் பிறகு, அட்டகாசமான ஐபோன் 14 -ஐ வெறும் 33,999 ரூபாய்க்கு வாடிக்கையாளர்களால் வாங்க முடியும்.
கூடுதல் தகவல்:
வரும் வாரங்களில் அறிமுகம் ஆகவுள்ள போன்களின் பட்டியல் இதோ
டிப்ஸ்டர் டெபயன் ராய், வரவிருக்கும் ஸ்மார்ட்போன்களின் பட்டியலை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். Realme 11 Pro, Realme 11 Pro+, Galaxy F54, OnePlus Nord, iQOO Neo 7 Pro, Infinix Note 30 series மற்றும் Oppo Reno 10 தொடர்கள் ஜூன் மாதத்தில் அறிமுகப்படுத்தப்படலாம் ena டிப்ஸ்டரின் கூறியுள்ளார். இருப்பினும், Oppo தொடர் பற்றி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. அதாவது, இது ஜூலை மாதத்திலும் அறிமுகம் ஆகலாம், அல்லது தாமதமும் ஆகலாம்.