இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
Siddharth about Indian 2: ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படம் குறித்து சுவாரஸ்ய தகவலை வெளியிட்டுள்ளார் சித்தார்த்.
சித்தார்த்பிரமாண்ட இயக்குநர் ஷங்கரிடம் உதவியாளராக இருந்த கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கியிருக்கும் டக்கர் படத்தில் நடித்திருக்கிறார் சித்தார்த். ஜூன் 9ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கும் டக்கர் படத்தை விளம்பரம் செய்து வருகிறார் அவர். இந்நிலையில் படத்தை விளம்பரம் செய்ய அளித்த பேட்டி ஒன்றில் இந்தியன் 2 படம் பற்றி விரிவாக பேசியிருக்கிறார். அவர் சொன்ன விஷயம் கமல் ஹாசன் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டது.சூரிரசிகரின் வீட்டிற்கு ஆட்டோவில் சென்ற சூரிஷங்கர்ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்துக் கொண்டிருக்கும் இந்தியன் 2 படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சித்தார்த். சுமார் 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் நடிக்கிறார். ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படம் மூலம் பட்டிதொட்டி எல்லாம் பிரபலமானார் சித்தார்த் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியன் 2இந்தியன் 2 படம் பற்றி சித்தார்த் கூறியதாவது, இது வாழ்க்கையில் ஒரு முறை கிடைக்கும் அனுபவமாக நினைக்கிறேன். எந்த மொழியில் அந்த படத்தை ரிலீஸ் செய்தாலும் பிளாக்பஸ்டர் தான். அந்த படத்தில் நடிக்குமாறு எனக்கு அழைப்பு வந்ததையே ஆசிர்வாதமாக நினைக்கிறேன். என்னை அறிமுகம் செய்து வைத்த இயக்குநருடன் சேர்ந்து வேலை செய்கிறேன். கமல் ஹாசனுடன் சேர்ந்து அவர் என்னை நடிக்க வைத்திருப்பது வேற லெவல். என்னை மீண்டும் அழைத்ததற்காக ஷங்கர் சாருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் என்றார்.
கமல்சித்தார்த் மேலும் கூறியதாவது, கமல் சார் மீதான அன்பு தான் என்னை நடிகனாக்கியது. ஒவ்வொரு முறையும் அவரை சந்திக்கும்போதும் நான் கொடுத்து வைத்தவன் என நினைத்துக்கொள்வேன். தற்போது அவருடன் சேர்ந்து நடிப்பது எனக்கு பெரிய விஷயம் ஆகும் என்றார்.
Wedding:முன்னாள் காதலி/காதலரின் திருமணத்தில் கலந்து கொண்ட நடிகர்கள், நடிகைகள்
கன்டிஷன்ஷங்கர் சார் எனக்கு மீண்டும் வாய்ப்பு அளித்தபோது பேச்சே வரவில்லை. அதுவும் இந்தியாவின் மிகப் பெரிய படங்களில் ஒன்றில் நடிக்க அழைத்தார். இந்தியன் 2 படம் பற்றி பேச ஆரம்பித்தால் குறைந்தது இரண்டு மாதங்களாவது பேசிக் கொண்டே இருப்பேன். படம் பற்றி எதுவும் சொல்லக் கூடாது என ஷங்கர் சார் என்னிடம் கூறியிருக்கிறார் என சித்தார்த் மேலும் தெரிவித்தார்.
மகிழ்ச்சிஇந்தியன் 2 படம் இரண்டு ஜாம்பவான்களான கமல் ஹாசன் சார், ஷங்கர் சார் பற்றியது. கமல் ஹாசன் சாருடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்பது என் கனவு. இந்தியன் 2 படம் நீங்கள் நினைப்பதை விட 10 மடங்கு பெரிய அளவில் இருக்கும் என்பதை உறுதியாக சொல்வேன் என்கிறார் சித்தார்த்.
ரசிகர்கள்இந்தியன் 2 படம் பற்றி எந்த அப்டேட்டும் கொடுக்காமல் இருக்கிறார் ஷங்கர். இந்நிலையில் இந்தியன் 2 பற்றி சித்தார்த் தெரிவித்த தகவல் கமல் ஹாசன் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது. கமல் ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படம் சூப்பர் ஹிட்டானது. இந்நிலையில் சித்தார்த் சொல்வதை பார்த்தால் இந்தியன் 2 படமோ விக்ரமை விட பெரிய அளவில் வெற்றி பெறும் போலயே என்கிறார்கள் கமல் ரசிகர்கள்.
Kamal Haasan:கமல் கெரியரில் முதல் முறையாக…இதை சத்தியமா எதிர்பார்க்கல ஆண்டவரே