Kerala Plans Passenger Ship Service To Gulf To Beat Exorbitant Air Charges | அரபு நாடுகளுக்கு கப்பல் சேவை: கேரள அரசு திட்டம்

திருவனந்தபுரம்: விமான கட்டணம் அதிகம் உள்ளதால், அரபு நாடுகளுக்கு பயணிகள் கப்பல் சேவையை துவக்க கேரள அரசு திட்டமிட்டு உள்ளது.

இது தொடர்பாக மாநில அமைச்சர் அஹமது தேவர்கோயில் கூறியதாவது: பண்டிகை நாட்களில், விமான நிறுவனங்கள் சாமனிய மக்களிடம் அதிகக் கட்டணம் வசூலிக்கின்றன. இதனால் அவர்கள் சொற்ப பணத்தை, வெளிநாட்டு பயணத்திற்கு அதிகளவு செலவு செய்ய வேண்டி உள்ளது. இதனால், கேரளாவில் இருந்து அரபு நாடுகளுக்கு கப்பல் சேவை துவக்குவது குறித்து நேற்று உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

வெளிநாடு வாழ் கேரளா விவகாரத்துறை அமைச்சகத்துடன் இணைந்து கப்பல் சேவை துவக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.