மாரிசெல்வராஜ் இயத்தில் உதயநிதி, வடிவேலு, பகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாமன்னன்’. ஏஆர் ரஹ்மான் இசை அமைக்க பல திரைப்பட்டாளங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.
இந்த ஜூன் மாதம் திரைக்காணவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் வெற்றிமாறன், நடிகர் வடிவேலுவின் சிறப்பான நடிப்பு குறித்தும் மாமன்னன் திரைப்படம் குறித்தும் பேசியுள்ளார்.
இதுகுறித்தப் பேசிய வெற்றி மாறன், “அரசியல் ரீதியான படங்களை வைத்து வணிக ரீதியான லாபத்தை ஈட்டுவது என்பது தமிழ்நாட்டில் மட்டும் தான். மாமன்னன் என்கிற தலைப்பின் கதாப்பாத்திரத்தை வடிவேலு நடித்திருக்கிறார். நாம் எல்லோரும் அவருடைய காமெடியை ரசித்திருப்போம். அவரை இப்போது சீரியஸான நடிப்பில் பார்க்கப்போகிறோம். வடிவேலுவின் நிலப்பரப்பை மையப்படுத்திய வசனங்களால் ஒரு ஊரை அனைத்து இடங்களுக்கும் கொண்டு சேர்த்திருக்கிறார். சமூக நீதியை சினிமாவை பேசியதால் தான் நீதி கிடைக்கிறது.” என்று கூறியுள்ளார்.