மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி, வடிவேலு, பகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘மாமன்னன்’.
இப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னை உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் மாரிசெல்வராஜ், இயக்குநர் மிஷ்கின், தியாகராஜன் குமாரராஜா, ஏ.ஆர் ரஹ்மான், வடிவேலு, சிவகார்த்திகேயன், சூரி, வெற்றிமாறன், பா.ரஞ்சித் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர். சிறப்பு விருந்தினராக நடிகர் கமல்ஹாசன் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் இவ்விழா மேடையில் பேசிய இயக்குநர் மிஷ்கின், மாரி செல்வராஜ், உதயநிதி குறித்தும் ‘மாமன்னன்’ திரைப்படம் குறித்தும் பேசியுள்ளார்.
இதுபற்றி பேசியுள்ள அவர், “மாரி, 2 படத்துலேயே 20 படத்துக்கானப் பேர வாங்கியிருக்கார். எல்லாமே கேளிக்கை படம் இல்ல. வாழ்வின் வலியை உணர்ந்து எடுத்த படம். அவனுக்கு என் பாராட்டுகள். இளையராஜாவுக்குப் பிறகு ஜீனியஸ் ரஹ்மான் சார். “He is making our life worthy” அவர் ரொம்ப நாள் நல்லா வாழணும். ஆனால், நாகேஷ் சாருக்குப் பிறகு, உடல்மொழியில் மதுரை ஃபார்மை கொண்டு வந்து உலகெங்கும் சேர்த்தவர் வடிவேல் சார் தான். உதய், நீங்க நல்லா வேலை பாருங்க 40 days க்கு ஒரு படம் பண்ணுங்க. அப்படி பண்ணாலும் ” ‘மாமன்னன்’ மாதிரி படம் பண்ணுங்க ‘சைகோ’ மாதிரி பண்ணாதீங்க. உங்க அம்மாகிட்ட நான் பேசுறேன். வெகு சீக்கிரத்தில் நம்மை எல்லாம் பார்த்துக்கொள்ளப் போகிறார் உதய். நான் சொல்லுறது புரியும்னு நினைக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.