மாரிசெல்வராஜின் ‘மாமன்னன்’ திரைப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியிட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது.
இதில் படக்குழுவினர் உட்பட திரைப்பிரபலங்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர். இந்நிலையில் இவ்விழாவில் கலந்து பேசியுள்ள நடிகர் சிவகார்த்திகேயன், உதயநிதி குறித்தும் மார்செல்வராஜ் மற்றும் வெற்றிமாறன் குறித்தும் கலகலப்பாகப் பேசியுள்ளார்.
இதுகுறித்து விழா மேடையில் பேசிய அவர், “என்னோட இயக்குநர் ராஜ்குமார், ஃபர்ஸ்ட் லுக் வரும்வரை என் முடியோட லுக்கக் காட்டவேணாம். கெட்டப் லாம் சொல்லாதீங்கனு சொல்லிருக்கார் ..அதுவும் கமல் சார் முன்னாடி அப்படிலாம் சொல்லக் கூடாது. ரஹ்மான் சார் , உங்க டான்ஸ் ரொம்ப நல்லா இருக்கு சார். இன்னும் டெலிபோன் மணிபோல் சாங் செம்ம இளமையா இருக்கு… எனக்கு தான் வயசு ஆயிடுச்சு. நானும் மாரி செல்வராஜ் பிரதரும் ஒண்ணா கிரிக்கெட் லாம் விளையாடி இருக்கோம். அப்போ அவர் ஒழுங்காக கிரிக்கெட் ஆடல ..ஆனா எடுத்த படம் எல்லாமே சிக்சர் தான். பரியேறும் பெருமாள், மாரி செல்வராஜ் சிறந்த இயக்குனர் என்று உலகிற்கு எடுத்துரைத்தது. இன்று வெற்றி மாறன் சாருக்கு கிடைத்த வரவேற்பு ஊக்கமளிக்கிறது. மாற்று சினிமாக்கான முயற்சியை எடுத்து கைத்தட்டல்களுக்குச் சொந்தமாகியிருக்கிறார்.அதை தொடங்கியது கமல் சார் தான். விதை கமல் சார் போட்டது தான்” என்று பேசியுள்ளார்.