இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
Madhavan news:மாதவனின் கண்களை பார்த்துவிட்டு அவரை நிராகரித்தார் மணிரத்னம் என்பது உங்களுக்கு தெரியுமா?
மாதவன்சந்தோஷ் சிவன் இயக்கிய பவுடர் விளம்பரத்தில் நடித்தார் மாதவன். அதன் பிறகு மும்பை தெருவில் நடந்து சென்ற மாதவனை பார்த்த டிவி சீரியல் எக்சிகியூட்டிவ் ஒருவர் அவருக்கு வாய்ப்பு அளித்தார். இதையடுத்து இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கத் துவங்கினார் மாதவன். இயக்குநர் மணிரத்னத்திடம் மாதவனை பரிந்துரை செய்தார் சந்தோஷ் சிவன்.சூரிரசிகரின் வீட்டிற்கு ஆட்டோவில் சென்ற சூரிஅலைபாயுதேRajinikanth: ரஜினி ரிடையர் ஆகிறாரா?: உண்மையை சொன்ன அண்ணன் சத்ய நாராயண ராவ்இருவர் படத்தில் தமிழ்செல்வன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான ஆடிஷனில் கலந்து கொண்டார் மாதவன். அவரின் கண்களை பார்த்துவிட்டு இந்த பையன் வேண்டாம் என்று கூறியிருக்கிறார் மணிரத்னம். ஒரு சீனியர் கதாபாத்திரத்திற்கு மாதவன் சரிபட்டு வர மாட்டார். அவரின் கண்கள் மிகவும் இளமையாக தெரிகிறது என்று கூறியிருக்கிறார் மணிரத்னம். அதன் பிறகே தன் அலைபாயுதே படம் மூலம் மாதவனை தமிழ் திரையிலகில் அறிமுகம் செய்து வைத்தார் மணிரத்னம்.
ஸ்மைல்அலைபாயுதே படம் பார்த்த ரசிகைகள் எல்லாம் மாதவனின் ஸ்மைலை பார்த்து இம்பிரஸ் ஆகிவிட்டார்கள். கட்டினால் அரவிந்த்சாமி மாதிரி ஆளை கட்ட வேண்டும் என்று சொல்லி வந்த இளம் பெண்கள் எல்லாம் அலைபாயுதே படம் பார்த்த பிறகு மாதவன் மாதிரி மாப்பிள்ளை வேண்டும் என சொல்லத் துவங்கினார்கள். தன் வசீகர ஸ்மைலால் அந்த அளவுக்கு ரசிகைகளை கவர்ந்தார் மாதவன். 2கே கிட்ஸுகள் கூட மாதவன் மாதிரி மாப்பிள்ளை கேட்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
ஆயுத எழுத்துமணிரத்னத்தின் மனம் கவர்ந்த நடிகர்களில் மாதவனும் ஒருவர். மணிரத்னம் தயாரித்த டும் டும் டும் படம் இன்றளவும் பிரபலம். மணிரத்னம் தயாரித்து, இயக்கிய கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் வேற மாதிரி மாதவனை பார்த்தோம். ஆனால் அந்த மாதவனையும் அனைவருக்கும் பிடித்துவிட்டது. லிங்குசாமியின் ரன் படத்தில் மாதவன் ஷட்டரை மூடி ரவுடிகளை அடித்த காட்சியை யாரும் இன்னும் மறக்கவில்லை. சாக்லேட் பாயான மாதவனை ஆயுத எழுத்து படத்தில் முரட்டு ஆளாக காட்டியிருந்தார் மணிரத்னம்.
Kamal Haasan: இந்தியன் 2, கமல் பற்றி வேல லெவல் விஷயம் சொன்ன சித்தார்த்: ரொம்ப சந்தோஷம் ஆண்டவரே
பாலிவுட்மாதவனை ஒரே இமேஜில் இருக்கவிடாமல் அவரை வித்தியாசம், வித்தியாசமாக காட்டிய பெருமை மணிரத்னத்தையே சேரும். மணியின் மனம் கவர்ந்த மாதவன் தமிழ் தவிர்த்து இந்தி திரையுலகிலும் மிகவும் பிரபலம். ஜம்ஷெத்பூரில் பிறந்து வளர்ந்த மாதவனுக்கு நன்றாக இந்தி பேச வரும் என்பதால் பாலிவுட்டில் அவருக்கு மொழி பிரச்சனையே இல்லை.
இறுதிச்சுற்றுஅழகா, க்யூட்டா சிரிக்கும் மாதவனை இறுதிச் சுற்று படத்தில் கடுகடுவென காட்டியிருந்தார் சுதா கொங்கரா. சிரித்த முகமாக பார்த்த மாதவனை சீரியஸாக பார்த்தும் கூட சைட் அடிப்பதை ரசிகைகள் நிறுத்தவில்லை. மாதவன் எப்படி வந்தாலும் எங்களுக்கு பிடிக்கும் என்றார்கள் ரசிகைகள். விக்ரம் வேதா படத்தில் மாதவன் வேறு மாதிரி வந்து அசத்தினார்.
ராக்கெட்ரிஇத்தனை ஆண்டுகளாக நடிகராக வலம் வந்த மாதவன், ராக்கெட்ரி படம் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தார். படம் பார்த்தவர்களோ, இது இயக்குநர் மாதவனின் முதல் படம் என்றே சொல்ல முடியாத அளவுக்கு சிறப்பாக இரு்கிறது என்று பாராட்டினார்கள். சின்னத்திரையில் இருந்து வந்தாலும் பெரியதிரையில் பெரிய அளவில் சாதிக்கலாம் என்பதற்கு மாதவனே சிறந்த எடுத்துக்காட்டு.