May GST collection at Rs 1.5 lakh crore: up 12% | மே மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.5 லட்சம் கோடி: 12% அதிகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: கடந்த மே மாதம் ஜி.எஸ்டி., ரூ.1,57,090 கோடி வசூல் ஆகி உள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மே மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1,57,090 கோடி வசூல் ஆகி உள்ளது.

latest tamil news

இதில்,

சிஜிஎஸ்டி ரூ.28,411 கோடி

எஸ்ஜிஎஸ்டி ரூ.35,828 கோடி

ஐஜிஎஸ்டி ரூ.81,363 கோடி வசூல் ஆகி உள்ளது.

latest tamil news
latest tamil news

இந்த ஆண்டு மே மாதம் வசூலான ஜிஎஸ்டி ஆனது, 2022ம் ஆண்டு மே மாதம் வசூல் ஆன ஜிஎஸ்டியை விட 12 சதவீதம் அதிகம் ஆகும்.

தொடர்ந்து 14 மாதங்களாக ஜிஎஸ்டி வசூல் ஆனது ரூ. 1.4 லட்சம் கோடி, தொடர்ந்து 5 மாதங்களாக ஜிஎஸ்டி வசூல் ரூ.1.5 லட்சம் கோடியையும் தாண்டி உள்ளது.

அதே போல் கடந்த ஆண்டு மே மாதத்தை காட்டிலும், இந்தாண்டு மே மாதத்தில் பொருட்கள் இறக்குமதி மூலம் கிடைத்த வருமானமும் 12 சதவீதமும், உள்நாட்டு பரிமாற்றங்கள் மூலம் கிடைத்த வருமானமும் 11 சதவீதம் அதிகம் ஆகும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

தமிழகத்தில்

தமிழகத்திலும் ஜிஎஸ்டி வசூல் ஆனது, கடந்தாண்டை விட 13 சதவீதம் அதிகரித்து இந்தாண்டு மே மாதம் ரூ.8,953 கோடி வசூல் ஆகி உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.