தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் தற்போது ‘ஜெயிலர்’ படம் உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ரஜினி நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் உருவாகவுள்ளது ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்க எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில் ‘தலைவர் 170’ படம் குறித்து வெளியாகியுள்ள தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
ரஜினி நடிப்பில் கடைசியாக ‘அண்ணாத்த’ படம் வெளியானது. வழக்கமான தனது பேமிலி சென்டிமென்ட் பாணியில் இந்தப்படத்தை இயக்கினார் சிறுத்தை சிவா. ‘அண்ணாத்த’ படம் பலவித நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்தால் ‘ஜெயிலர்’ படத்தை எப்படியாவது ஹிட்டாக்கி விட வேண்டும் என மும்முரமாக செயல்பட்டு வருகிறார் ரஜினி.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் இந்தப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, விநயாகன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இவர்களுடன் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட பிரபலம் சிவராஜ்குமார், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெரப் மற்றும் சுனில் உள்ளிட்ட பல மொழிகளை சார்ந்த பிரபலங்கள் ‘ஜெயிலர்’ படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர்.
இதன் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வரும் நிலையில் ‘ஜெயிலர்’ படம் வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி ரிலீசாகவுள்ளது. இதனிடையில் தனது மகள் ஐஸ்வர்யா இயக்கும் ‘லால் சலாம்’ படத்திலும் கெஸ்ட் ரோலில் நடித்து வருகிறார் ரஜினி. லைகா தயாரிப்பில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவாகும் இந்தப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
STR 48: படப்பிடிப்பே இன்னும் துவங்கல.. சிக்கலில் மாட்டிய சிம்பு – கமல் படம்..!
இதனிடையில் லைகா தயாரிப்பில் உருவாகவுள்ள ‘தலைவர் 170’ படத்தை இயக்கும் வாய்ப்பை த.செ. ஞானவேல் கைப்பற்றியுள்ளார். ‘ஜெய் பீம்’ படத்தின் மூலம் பெரும் வரவேற்பை பெற்ற ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பது ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமான எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. இந்தப்படத்த்தில் வில்லனாக நடிக்க விக்ரமிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியானது. ஆனால் வில்லனாக நடிக்க விக்ரம் மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள லேட்டஸ்ட் தகவலின்படி ஆக்ஷன் கிங் அர்ஜுன் இந்தப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது விஜய்யின் லியோவில் நெகட்டிவ் ரோலில் நடித்து வரும் அர்ஜுன் அடுத்ததாக ரஜினிக்கு வில்லனாக நடிக்கவுள்ளார். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு போலி என்கவுண்டர் குறித்து பேசும் படமாக உருவாகவுள்ள ‘தலைவர் 170’ படத்தில் ரஜினி இஸ்லாமியராக நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தந்தை புகைப்படத்திற்கு முன் ஆசீர்வாதம் வாங்கிய மகன்: மேக்னா ராஜின் உருக்கமான பதிவு.!