Samsung முதல் ஒன்ப்ளஸ் வரை ஜூன் 2023 வெளியாகும் ஸ்மார்ட்போன்கள்!

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
இந்தியாவில் ஜூன் 2023 மாதம் முக்கியமான சில ஸ்மார்ட்போன்கள் வெளியாகவுள்ளன. ஸ்மார்ட்போன் விற்பனையில் அதிகப்படியான போட்டியாளர்கள் உள்ள இந்திய சந்தையில் ஒவ்வொரு மாதமும் பல வகையான
ஸ்மார்ட்போன்கள்
பல செக்மென்ட்களில் வெளியாகின்றன. மக்கள் மத்தியில் பிரபலமான ஸ்மார்ட்போன் நிறுவனங்களான One plus, Samsung, Realme, Motorola, Nothing ஆகிய நிறுவனங்கள் அவர்களின் புதிய கண்டுபிடிப்புகளை மக்கள் மத்தியில் வெளியிட தயாராக உள்ளன.

​Nothing Phone 2இந்த ஆண்டு மிகவும் அதிகப்படியான எதிர்பார்ப்பில் இருக்கும் ஒரு பிரீமியம் மிட் ரேஞ்சு ஸ்மார்ட்போனாக இந்த Nothing Phone 2 உள்ளது. இந்த போனில் இடம்பெறப்போகும் சில முக்கியமான அம்சங்கள் மற்றும் வசதிகளை அந்த நிறுவனம் ஏற்கனவே வெளியிட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் Qualcomm Snapdragon 8+ Gen 1 SoC Processor, 8GB RAM, 128GB ஸ்டோரேஜ், 4700mAh பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங், வயர்லெஸ் சார்ஜிங் போன்ற வசதிகள் கொண்டு வெளியாகும் என்று தெரிகிறது. இது ஜூன் மாத இறுதி அல்லது ஜூலை தொடக்கம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.Onepplus Nord 3சீனாவில் வெளியாகியுள்ள Oneplus Ace 2V ஸ்மார்ட்போனின் இந்திய மாடல் இந்த Oneplus Nord 3 ஆகும். இந்த ஸ்மார்ட்போனில் Mediatek Dimensity 9000 SoC சிப் வசதி, 6.7 இன்ச் டிஸ்பிளே, 1.5K Resolution, 120HZ refresh rate, in-Display பிங்கர் பிரிண்ட் சென்சார் போன்ற வசதிகள் இடம்பெறும். இது Oneplus Nord 2T ஸ்மார்ட்போனில் இருந்து ஒரு மிகப்பெரிய அப்டேட் ஆகும்.​Samsung Galaxy S23 FEசாம்சங் நிறுவனத்தின் தலைசிறந்த S23 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் விலை குறைந்த மாடலாக இந்த S23 FE வெளியாகும். இதில் Exynos 2200 SOC சிப், 120HZ Refresh rate, Android 13 சார்ந்து உருவாக்கப்பட்ட OneUI OS, ட்ரிபிள் கேமரா, டெலிபோட்டோ லென்ஸ், அல்ட்ரா வைட் லென்ஸ், வயர்லெஸ் சார்ஜிங், IP ரேட்டிங் போன்ற வசதிகளை கொண்டிருக்கும்.​iQoo Neo 7 Proஇந்த பிரீமியம் ஸ்மார்ட்போன் iQoo neo 7 மற்றும் iQoo 11 ஆகிய ஸ்மார்ட்போன்களுக்கு இடைப்பட்ட மாடலாக இருக்கும். இந்த ஸ்மார்ட்போனில் Qualcomm Snapdragon 8+ Gen 1 SoC சிப் இடம்பெறும். இதில் முழு FHD + டிஸ்பிளே வசதி, 120HZ refresh rate, ஒரு மிகப்பெரிய பேட்டரி, 120W பாஸ்ட் சார்ஜிங் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.​Motorola X40இன்னும் சில வாரங்களில் வெளியாகவுள்ள இந்த மோட்டோ X40 ஒரு தலைசிறந்த Qualcomm Snapdragon 8 Gen 2 சிப் கொண்டிருக்கும். சமீபத்தில் மோட்டோரோலா நிறுவனத்தின் Moto Edge 40 மக்கள் மத்தியில் அமோகமான வரவேற்பு பெற்றது. அதை தக்கவைக்கும் நோக்கில் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளியாகவுள்ளது.
இதில் ஒரு 6.7 இன்ச் 165HZ Refresh rate டிஸ்பிளே வசதி, in-Display பிங்கர் பிரிண்ட் சென்சார் வசதி, IP68 Rating என பல பிரீமியம் அம்சங்களை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் விலை குறைவான பிரீமியம் போன்களில் ஒன்றாக இருக்கும்.​Realme 11 Pro+இந்த மிட் ரேஞ்சு ஸ்மார்ட்போன் ஒரு மிகப்பெரிய 200MP முக்கிய கேமரா வசதி, Mediatek Dimensity 7050 SoC சிப், 8GB RAM, 128GB ஸ்டோரேஜ், லெதர் பேக் பேனல், கர்வ் டிஸ்பிளே வசதி போன்றவற்றை கொண்டுள்ளது.
​செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்​

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.