சென்னை: ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படம் விரைவில் தொடங்க உள்ளது. இதற்காக திரைக்கதையை உருவாக்கும் பணிகளில் வெங்கட் பிரபு ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
லியோ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், வரும் ஜூலை மாத இறுதிக்குள் படப்பிடிப்பு நிறைவடையும் என எதிரபார்க்கப்படுகிறது.
அதற்கு பிறகு ஆகஸ்ட் மாதத்தில் தளபதி 68 படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்றும் பேச்சுக்கள் அடிபட்டு வரும் நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கு எங்கே ஆபிஸ் ரூம் போட்டுக் கொடுத்துள்ளனர் என்கிற தகவல்கள் கசிந்துள்ளன.
வெங்கட் பிரபுவுக்கு ஜாக்பாட்: அஜித்தின் மங்காத்தா படத்தை முடித்த கையோடு விஜய் படத்தை இயக்கி விடலாம் என நினைத்துக் கொண்டிருந்த வெங்கட் பிரபுவுக்கு 10 ஆண்டுகள் மேலாக கிடைக்காத வாய்ப்பு தற்போது தளபதி 68 படத்தை இயக்க ஜாக்பாட்டாக அமைந்துள்ளது.
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் விஜய் நடிக்க உள்ள இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கப் போகிறார் என்றும் யுவன் சங்கர் ராஜா தான் இசை என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி உள்ளது.
200 கோடி சம்பளம்: லியோ படம் வெளியாகும் முன்னதாகவே தளபதி 68 படத்தின் அறிவிப்பை வெளியிட்ட நிலையில், அந்த படத்தில் விஜய்க்கு 200 கோடி ரூபாய் சம்பளம் என்கிற பேச்சுக்களும் காட்டுத் தீயாக எழுந்துள்ளன.
லியோ படத்தின் மீதான பிரம்மாண்ட எதிர்பார்ப்பை வைத்தே தனது அடுத்த படத்திற்கான சம்பளத்தை ஜெட் வேகத்தில் விஜய் ஏற்றி விட்டார் என்கின்றனர். விஜய் சம்பளமே 200 கோடி என்றால் படத்தின் பட்ஜெட் 300 கோடியா? அல்லது 350 கோடியா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
ஊட்டியில் லூட்டி: தளபதி 68 படத்திற்காக திரைக்கதை அமைக்கும் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகளில் ஈடுபட்டு வரும் இயக்குநர் வெங்கட் பிரபுவுக்காக அவர் கேட்டது போல தற்போது ஊட்டியில் ஒரு ரெசார்ட்டே புக் செய்து தயாரிப்பு நிறுவனம் கொடுத்துள்ளதாம்.
சமீபத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் வென்றதை தனது நண்பர்களுடன் சரக்கடித்து கொண்டாடிய வெங்கட் பிரபு ஊட்டி குளிரில் திரைக்கதையை விரைவாக ரெடி செய்து விடுவாரா? அல்லது தினமும் பார்ட்டி பண்ணிட்டு இருக்கப் போறாரா என்றும் சினிமா வட்டாரத்தில் கிண்டல் பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.