சென்னை : விஜய் டிவியின் அதிரடி சீரியலாக மாறியுள்ளது தமிழும் சரஸ்வதியும். இந்தத் தொடரில் தமிழை அவரது வளர்ச்சியை குலைக்க அவரது மச்சான் அர்ஜூன் அடுத்தடுத்த சதித்திட்டங்களை தீட்டுகிறார்.
அர்ஜூனின் அடுத்தடுத்த சதித்திட்டங்கள் சிறப்பாகவே வேலை செய்ய, தமிழ் மற்றும் அவரை தொடர்ந்து சரஸ்வதி இருவரும் வீட்டை விட்டு வெளியேறுகின்றனர்.
தமிழ் தற்போது தனியாக பிசினஸ் ஒன்றை துவக்கி தன்னுடைய அம்மாவின் கோதை இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கே டஃப் கொடுக்கிறார்.
தமிழும் சரஸ்வதியும் தொடரில் சரஸ்வதியின் அதிரடி முடிவு : விஜய் டிவியின் தமிழும் சரஸ்வதியும் தொடர், அந்த சேனலின் முன்னணி தொடர்களில் ஒன்றாக அமைந்துள்ளது. டிஆர்பியிலும் முதல் பத்து இடங்களில் இந்தத் தொடர் முன்னணியில் இடம்பெற்று ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்நிலையில் இந்தத் தொடரின் அடுத்தடுத்த ப்ரமோக்கள் மற்றும் எபிசோட்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. இந்தத் தொடரில் தமிழை அழிக்க நினைக்கும் அர்ஜூன், அடுத்தடுத்த சதித்திட்டங்களை அரங்கேற்றுகிறார். அதற்கு அவரது குடும்பத்தினர் அவருக்கு துணை நிற்கின்றனர்.
தன்னை கத்தியால் குத்த அடியாட்களை பிக்ஸ் செய்யும் அர்ஜூன், தமிழ்தான் தன்னை குத்தியதாக மற்றவர்களை நம்ப வைக்கிறார். இந்த சம்பவத்தை பார்க்கும் அவரது மனைவி இதற்கு சாட்சியாக அமைகிறார். இந்நிலையில், இந்த சம்பவத்தையடுத்து, தமிழ் மற்றும் அவரைத் தொடர்ந்து சரஸ்வதி இருவரும் வீட்டை விட்டு வெளியேறுகின்றனர். இதனால் பொறுப்பு அர்ஜூன் மற்றும் தமிழின் தம்பி கார்த்திக் கைவசம் கைமாறுகிறது.
கார்த்திக் எடுப்பார் கைப்பிள்ளையாக, அர்ஜூன் சொல்லும் அனைத்தையும் நம்பி, கோதை இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு தடையாக நிற்கிறார். இதனால், கோதை மற்றும் நடேசன் இருவரின் அதிருப்தியையும் சம்பாதிக்கிறார். இதனிடையே, வெளியில் செல்லும் தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் இணைந்து புதிதாக சரஸ்வதி இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை துவக்குகிறார். இதனால் கோதை உள்ளிட்ட குடும்பத்தினரின் கோபத்திற்கும் உள்ளாகிறார்.
இதனிடையே, தன்னுடைய கணவனுக்கு கைக்கொடுக்க மெக்கானிக் ஷாப்பில் வேலைக்கு போகிறார் சரஸ்வதி. இந்த விஷயம் தெரியவர, தமிழும் அதை ஓகே செய்கிறார். ஆனால், சரஸ்வதியையும் அவரது ஓனரையும் இணைத்து சிலர் அவதூறாக பேச, அவர்களிடம் சண்டை பிடிக்கிறார். ஆனால் இதற்கு சரஸ்வதிதான் காரணம் என்றும் அவர்களை அப்படி பேசும்படி அவர் செய்ததாகவும் தமிழ் அவரிடமும் கோபப்படுகிறார்.
இதனிடையே, இவர்களின் சண்டை குறித்து தெரியவரும் வசுமதி, தமிழின் ஒத்துழைப்பால்தான் சரஸ்வதி முன்னேற்றப் பாதையில் நடைபோடுவதாக, மீடியா மூலம் சொல்லவைத்து, பேட்டியும் எடுக்க வைக்கிறார். இதனால் தமிழின் மனம் மாறுகிறது. இதனிடையே, அவர் வீட்டிற்கு வர, அங்கே சரஸ்வதி வேலைக்கு செல்லாமல் இருப்பதை பார்க்கிறார். அதற்கு அவர், மறைமுகமாக தமிழின் சந்தேகம்தான் இதற்கு காரணம் என்று கூறுகிறார்.
அவரது இந்த முடிவால், தமிழிற்கு குழப்பம் ஏற்படுகிறது. மீடியாக்காரர்கள் தன்னிடம் எடுத்த பேட்டியையும் அவர் நினைத்துப் பார்ப்பதாக தற்போதைய எபிசோட் காணப்படுகிறது. ஆனால் தான் யார் சொன்னாலும் மீண்டும் வேலைக்கு போக மாட்டேன் என்றும் தான் வேலைக்கு போக துவங்கியதில் இருந்து தன்னுடைய வாழ்க்கையில் ஏராளமான பிரச்சினைகள் வருவதாகவும் சரஸ்வதி கட் அண்ட் ரைட்டாக கூறுகிறார்.
இதனிடையே, அர்ஜூனை தன்னுடைய மகன் தமிழ் கத்தியால் குத்தியிருக்க மாட்டார் என்ற சந்தேகம் நடேசனுக்கு எழுகிறது. இதையடுத்து சம்பவம் நடந்த இடத்தில் அவர் சிசிடிவி கேமரா புட்டேஜை வாங்கி, அதை பரிசோதிக்கிறார். ஆனால் இதுகுறித்து அறியும் அர்ஜூன், தன்னுடைய மனைவியை நடேசனுடன் வாக்கிங் அனுப்பிவிட்டு, முக்கியமான புட்டேஜை டெலிட் செய்கிறார். இநத் விவகாரத்தில் நடேசனுக்கு அர்ஜூன் மீது சந்தேகம் வருகிறது.