சென்னை: அஜித்தின் விடாமுயற்சி படத்தை மகிழ் திருமேனி இயக்கவுள்ளார்.
லைகா தயாரிக்கும் இந்தப் படத்தின் அபிஸியல் அப்டேட் அஜித்தின் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியானது.
விடாமுயற்சி என்ற டைட்டில் டீசர் மட்டுமே வெளியான நிலையில், இன்னும் படப்பிடிப்பு தொடங்கவில்லை.
விடாமுயற்சி ஷூட்டிங் அப்டேட்டுக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு தற்போது சில தகவல்கள் கிடைத்துள்ளன.
புனேவில் விடாமுயற்சி படக்குழு: துணிவு படம் வெளியானதுமே அஜித்தின் ஏகே 62 சூட்டிங் தொடங்கும் என சொல்லப்பட்டது. ஆனால், முதலில் ஏகே 62 இயக்குநராக கமிட்டாகியிருந்த விக்னேஷ் சிவன் ஸ்கிரிப்ட் விஷயத்தில் சொதப்பியதால் எல்லாமே தலைகீழாக மாறியது. இறுதியாக விக்னேஷ் சிவனுக்குப் பதிலாக மகிழ் திருமேனி ஏகே 62 படத்தை இயக்குவது உறுதியானது.
ஆனால், அதுகுறித்து அபிஸியல் அப்டேட் எதுவுமே வெளியாகாமல் இருந்த நிலையில், அஜித்தின் பிறந்தநாள் தினத்தில் ஏகே 62 டைட்டில் டீசர் வெளியானது. அதன்படி ஏகே 62 படத்திற்கு விடாமுயற்சி என்ற டைட்டில் கன்ஃபார்ம் ஆனது. லைகா தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். அஜித், லைகா, மகிழ் திருமேனி, அனிருத் தவிர விடாமுயற்சி படத்தில் மேலும் யாரெல்லாம் இணையவுள்ளார்கள் என்பது இன்னும் தெரியவில்லை.
விடாமுயற்சி அப்டேட் வெளியான போது அஜித் நேபாளம், பூடான் நாடுகளில் பைக் ட்ரிப் செய்துகொண்டிருந்தார். பின்னர் சென்னை திரும்பிய அஜித் கடந்த வாரம் கேரளாவின் வயநாடு பகுதிகளில் பைட் ட்ரிப் சென்றிருந்தார். அதனால், விடாமுயற்சி படப்பிடிப்பு தொடங்க இன்னும் தாமதமாகுமோ என ரசிகர்கள் கவலையில் இருந்தனர். ஆனால், அப்படியெல்லாம் எதுவும் இல்லை, வரும் 7ம் தேதி விடாமுயற்சி படப்பிடிப்பு தொடங்கும் எனக் கூறப்படுகிறது.
விடாமுயற்சி ப்ரீ புரொடக்ஷன் வேலைகளை முடித்துவிட்ட மகிழ் திருமேனி, தற்போது படப்பிடிப்பைத் தொடங்க ரெடியாகிவிட்டாராம். அதற்காக தனது படக்குழுவினருடன் புனே சென்ற மகிழ் திருமேனி, அங்கு பிரம்மாண்டமான செட் போடும் வேலைகளை கண்காணித்து வருகிறாராம். தற்போது இந்த செட் ஒர்க் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அஜித் வந்தால் உடனடியாக படப்பிடிப்பை தொடங்கிவிடலாம் என மகிழ் திருமேனி சிக்னல் கொடுத்துள்ளார்.
இதனையடுத்து அஜித் விரைவில் புனே செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் முதற்கட்டமாக அஜித் நடிக்கும் ஆக்ஷன் காட்சிகளை படமாக்க பிளான் போட்டுள்ளாராம் மகிழ் திருமேனி. அதற்காகவே புனேவில் செட் போடப்பட்டுள்ளதாக படக்குழு தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரம்மாண்டமாக உருவாகும் இந்த சண்டைக் காட்சி அஜித் ரசிகர்களுக்கு தரமான ஆக்ஷன் ட்ரீட்டாக இருக்குமாம். அதேபோல், விடாமுயற்சி ஷூட்டிங் தொடங்கியதும் இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் குறித்த அப்டேட் வெளியாகும் என சொல்லப்படுகிறது.