அகாடமி பட்டமளிப்பு விழாவில் தவறி விழுந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

கொலோராடோ,

அமெரிக்க வரலாற்றில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் மிக வயதான அதிபாராக ஜோ பைடன் இருந்து வருகிறார். இந்நிலையில் கொலராடோவில் உள்ள அமெரிக்க விமானப்படை அகாடமியின் பட்டமளிப்பு விழாவில் சான்றிதழ்களை வழங்கும் நிகழ்ச்சியில் அதிபர் ஜோ பைடன் கலந்து கொண்டார்.

அப்போது விழா மேடையின் அருகே தடுமாறி விழுந்த ஜோ பைடன் கீழே விழுந்தார். பின்னர் துரிதமாக செயல்பட்ட விமானப்படை அதிகாரிகள் அவருக்கு உதவினர். பின்னர், அதிகாரிகளின் உதவி ஏதுமின்றி, அவர் நடந்து சென்று தமது இருக்கையில் அமர்ந்தார். விழாவின் போது சுமார் ஒன்றரை மணி நேரம் அதிபர் ஜோ பைடன் நின்ற நிலையில் 921 பேர்களுக்கு பட்டமளித்துள்ளதுடன் அவர்களுடன் கைகுலுக்கி பாராட்டு தெரிவித்தார்.

இந்த சூழலில் வெள்ளைமாளிகை வெளியிட்ட தகவலில், அதிபர் ஜோ பைடன் நலமாக இருக்கிறார், பாதிப்பு ஏதுமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விழா நடந்த மேடையில் மணல் மூட்டைகள் இருந்தநிலையில் அதிபர் ஜோ பைடன் அந்த மணல் மூட்டை ஒன்றில் மிதித்து கால் தடுமாறி கீழே விழுந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.