ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தின் மத்தியில் அமைந்துள்ளது கோவிந்தராஜ சுவாமி கோவில். இந்த கோவில் 12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. திருப்பதி மாவட்டத்தில் உள்ள பழமையான மற்றும் பெரிய கோவில்களில் ஒன்றாகவும் கோவிந்தராஜ சுவாமி கோவில் உள்ளது.
இந்த கோவில் தற்போது திருமலை திருப்பதி தேவஸ்தானத்தால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த கோவிலில் வருடாந்திர பிரமோற்சவம் நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கோவிலில் வழிபாடு செய்து வருகின்றனர்.
48 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை… எங்கெல்லாம் அடிச்சு நொறுக்கப் போகுது?
இந்நிலையில் நேற்று பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்போது கோவிந்த ராஜ சுவாமி கோவிலில் இருந்த 100 ஆண்டுகள் பழமையான அரச மரம் எதிர்பாராதவிதமாக வேறோடு சாய்ந்தது. இதில் சிக்கி கோவிலுக்கு வந்த குரப்பா என்ற மருத்துவர் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே மரண மடைந்தார்.
65 வயதான குரப்பா ஈஎன்டி மருத்துவர் ஆவார். கடப்பாவை சேர்ந்த திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். மேலும் பலர் மரத்தின் கீழ் சிக்கி காயமடைந்துள்ளனர்.
கேரளாவை அச்சுறுத்தும் புயல்… காத்திருக்கும் கனமழை!
அவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசியுள்ள போலீசார் திருப்பதி முழுவதும் நேற்று பலத்த சூறைக்காற்று வீசியதாகவும், அதுவே 100 ஆண்டுகள் பழமையான மரம் வேறோடு சாய காரணம் என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும் பல பக்தர்கள் நூலிழையில் உயிர் பிழைத்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். கோவிலுக்கு வந்த பக்தர் மரம் விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் எம்பி செந்தில்குமார்… மாலத்தீவில் செம ஜாலி… போட்டோஸ்!