சென்னை : நடிகை கேப்ரில்லா புடவையில் விதவிதமான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவான 3 திரைப்படத்தில், ஸ்ருதி ஹாசனின் தங்கையாக நடித்திருந்தார் கேப்ரில்லா.
அந்த படத்தில் வாய் பேசமுடியாத கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தாலும், அந்த கதாபாத்திரம் பேசும் படி இருந்தது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் : நடிகை கேப்ரில்லா 3 திரைப்படத்திற்கு பிறகு நடிகர் சமுத்திரக்கனி எழுதி இயக்கியிருந்த அப்பா திரைப்படத்தின் மூலம் பல்வேறு மக்களுக்கு கேப்ரில்லாவின் மிகவும் பரிச்சயமானார். அதன் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஐந்து லட்சம் பணப்பெட்டியுடன் வெளியேறினார்.
ஈரமான ரோஜாவே 2 : கேப்ரில்லா தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே 2 சீரியலில் காவியா என்ற ரோலில் நடித்து வருகிறார். இந்த சீரியல் இல்லத்தரசிகள் மத்தியில் மிகவும் பிரபலமாக கேப்ரில்லாவின் நடிப்புக்கு என்றே தனி ரசிகர் கூட்டம் உள்ளது. டிஆர்பி ரேட்டிங்கிலும் இந்த சீரியலில் காவியா, பார்த்திபன் ரொமான்ஸ் அட்டகாசமானதாக உள்ளது.
சொந்த யூடியூப் சேனல் : கேப்ரில்லா சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். இந்த யூடியூப் சேனலில் ஈரமான ரோஜாவே காவ்யா மேக்கப் டிப்ஸ், நியூ கார் வாங்கிய வீடியோ, ஆஜித்துடன் இணைந்து பல ரீல்ஸ் வீடியோக்களை அப்லோட் செய்து லைக்ஸ்களை அள்ளி வருகிறார். கேபிரில்லாவும், ஆஜித்தும் அடிக்கடி சந்திக்கும் போட்டோவையும் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
புடவையில் செம க்யூட் : இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரண்டு புள்ளி ஒரு மில்லியன் பாலோவரை வைத்திருக்கும் கேப்ரில்லா, க்யூட்டாக புடவை கட்டி அட்டகாசமாக போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கேப்ரில்லாவின் அழகை வர்ணித்து கவிதை பாடி வருகின்றனர்.