அரச துறையின் அனுசரணையில் ஆரம்பிக்கப்பட்ட இலங்கையின் முதலாவது உருளைக் கிழங்கு சீவல் தயாரிக்கும் உற்பத்தித் தொழிற்சாலை ஆரம்பிப்பதற்கான ஆராய்ச்சிகள் தற்போது வெற்றியடைந்துள்ளன.
விவசாய அமைச்சின் சிறியளவிலான விவசாயக் கைத்தொழிலில் பங்கேற்பதற்கான (எஸ்பிபி) திட்டம் மற்றும் பண்டாரவெள கஹந்தேவெல விவசாய மக்கள் சங்கத்துடன் இணைந்து இந்நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பண்டாரவெள கஹந்தேவெலயில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இவ் உருளைக்கிழங்கு சீவல் தொழிற்சாலையின் உற்பத்திகளை ஆராய்வு செய்ததில் தற்போது வெற்றி கிடைத்துள்ளதாகவும், விவசாய மக்கள் சங்கத்தினால் நேற்று முன்தினம் (31) விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிற்கு தெரிவிக்கப்பட்டது.
நூறு மில்லியன் ரூபா செலவில் நிருமாணிக்கப்பட்ட இந்த உருளைக்கிழங்கு சீவல் ஏற்றுமதியை இலக்காகக் கொண்டு நாட்டில் உருளைக்கிழங்கில் பெறுமதி சேர்க்கப்பட்ட உற்பத்தியாக சந்தைக்கு அனுப்பும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்படும் திட்டம் என விவசாய அமைச்சர் தெரிவித்தார்.
நாட்டில் சில உணவு பதப்படுத்தும் நிறுவனங்களினால் உருளைக்கிழங்கு சீவல் ஏற்றுமதி செய்யப்படுவதுடன் 2021 வருடத்தில் அதற்காக 21 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. அவ்வாறே தற்போது நாட்டின் தனியார் துறையின் உருளைக் கிழங்கு சீவல் சில நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. 2021ஆம் ஆண்டின் தரவுகளுக்கு இணங்க நாட்டின் உற்பத்தித் துறையில் உருளைக் கிழங்கு சீவல் ஒரு தொன் 6321 டொலர் வீதம் சந்தைப்படுத்தப்பட்டுள்ளது.
கஹந்தேவெல உருளைக் கிழங்கு சீவல் தொழிற்சாலையின் உற்பத்திகள் வெளிநாட்டு சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்படுவதுடன் நாட்டிற்கு தேவையைப் பூர்த்தி செய்வதற்காக வகுக்கப்பட வேண்டும்.
இத்தொழிற்சாலையினுள் ஒரு நாளைக்கு உருளைக் கிழங்கு சீவல் 1000 கிலோ அளவில் தயாரிக்கலாம். அத்துடன் உருளைக் கிழங்கு விவசாயிகள் 200 பேரிடமிருந்து உற்பத்திக்கான உருளைக் கிழங்குகளை இத்தொழிற்சாலைக்குக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது உருளைக் கிழங்கை அதிகம் பயிரிடும் வெளிமடை பொரலந்த வில் 3000 ஹெக்டயர் அளவில் உருளைக் கிழங்கு விவசாய வலயத்தில் போதுமான அளவு வீதி வசதிகள் இன்மை காரணமாக இவ்வருடத்தின் விவசாய அபிவிருத்தித் திணைக்களத்தின் வீதி அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதிச் செலவில் இவ்வீதி மறுசீரமைப்பிற்குப் பயன்படுத்துமாறு அமைச்சர் ஆலோசனை வழங்கினார்.
கஹந்தேவெல உருளைக் கிழங்கு சீவல் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்டதன் பின்னர் அதனுடன் இணைந்த தொழில்வாய்ப்புக்கள் பல காணப்படுவதாக விவசாய மக்கள் சங்கம் தெரிவித்தது. இத்தொழிற்சாலையை இயன்றளவு விரைவாகத் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் ஆலோசனை வழங்கினார்.