சென்னை: இசையமைப்பாளர் இளையராஜாவின் பிறந்தநாளையொட்டி கோடம்பாக்கத்தில் உள்ள அவரது அலுவலகத்துக்கு நேரில் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். இசைஞானி என அன்போடு ரசிகர்களால் அழைக்கப்படும் இசையமைப்பாளர் இளையராஜா இன்று தனது 80வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ஏராளமானோர் தங்கள் வாழ்த்துகளை நேரிலும், சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இளையராஜாவை அவரது அலுவலகத்தில் சந்தித்து தனது வாழ்த்துகளை தெரிவித்தார். தனது இல்லத்திற்கு வந்த முதலமைச்சரை பொன்னாடை போர்த்தி இளையராஜா வரவேற்றார். […]