அமைச்சர்
நடித்துள்ள மாமன்னன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (ஜூன் 1) சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வரும் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், வைகை புயல் வடிவேலு இருவரும் நடித்துள்ளனர். வடிவேலு இதுவரை நடித்திராத கதையம்சம் கொண்ட கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக சொல்லப்படுகிறது.
தமிழில் நீண்ட நாட்கள் கழித்து நாய் சேகர் படத்தின் மூலம் கம் பேக் கொடுத்துள்ள வடிவேலுக்கு அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு பயனளிக்கவில்லை. இந்நிலையில் மாமன்னன் திரைப்படம் அவருக்கு புதிய மைல் கல்லாக அமையும் என்கின்றனர்.
இந்நிலையில் இப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் உதயநிதி பேசியிருப்பது விவாதமாகியுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில் அமைச்சராக உதயநிதி பொறுப்பேற்றபோது ‘ இனி சினிமாவில் நடிக்க போவதில்லை ‘ என்று உதயநிதி அறிவித்தார். இந்த நிலையில், மாமன்னன் இசைவெளியீட்டு விழாவில் பேசிய அமைச்சர் உதயநிதி மீண்டும் யூ டர்ன் அடித்துள்ளார்.
அதில், இன்னொரு படம் நடித்தால் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தான் நடிப்பேன்… கமல் சார் தயாரிப்பில் ஒரு படம் நடிப்பதாக இருந்தேன். ஆனால், அமைச்சர் பதவி கிடைத்த பிறகு நிறைய பணி சுமைகள் இருந்தது. அதனால் படம் நடிக்க முடியவில்லை… அடுத்து இன்னொரு படம் நடித்தால் மாரி செல்வராஜின் இயக்கத்தில்தான் நடிப்பேன் என்று உறுதி அளித்துள்ளேன்.. ஆனால், 3 ஆண்டுகள் நான் படம் பண்ணும் வாய்ப்பு இல்லை’ என்று கூறியுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
இப்படி உதயநிதி ஸ்டாலின் மாற்றி மாற்றி பேசி வருவதை எதிர்கட்சியினரும், நெட்டிசன்களும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். திமுக ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் ஆகியுள்ளதால் ஆட்சி முடிய இன்னும் 3 ஆண்டுகள் உள்ளன. அதை ஒப்பிட்டுதான் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு படம் பண்ணும் வாய்ப்பு இல்லை என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எதிர்கட்சியானதும் பணி சுமை குறையும் என்பதால் நடிக்க திட்டமிட்டிருப்பதாக பார்க்கப்படுகிறது.
இதனை சுட்டிக்காட்டும் நெட்டிசன்கள், ‘ 2026ல் திமுக தோற்கும் என்பதால் அதன் பிறகு படத்தில் நடிப்பேன் என்று சின்னவர் அறிவித்துள்ளார்’ என்று கிண்டலாக போஸ்ட் போட்டு வருகின்றனர். முன்னதாக தனது மகன் உதயநிதியயை அரசியலுக்கு இழுக்க மாட்டேன் என்றும் திமுகவில் குடும்ப அரசியல் இல்லை என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் கூறியிருந்தார். ஆனால், அவருக்கு எம்எல்ஏ சீட் கொடுத்து பின்னர் அமைச்சராக்கியுள்ளார் ஸ்டாலின். அது விவாதமானது. அதனை தொடர்ந்து அமைச்சரான பின்னர் இனி சினிமாவில் நடிக்க போவதில்லை என்று அறிவித்த உதயநிதி ஸ்டாலின் இப்போது படத்தில் நடிக்க போவதாக கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.