ஐபிஎல் முடிந்துவிட்டது.. இந்திய அணி பங்கேற்கும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் முழு விவரம்!

Indian Cricket Team Full List of Schedule: கடந்த ஒரு மாதமாக பிரமாண்டமாக நடந்த இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) முடிந்துள்ள நிலையில், தற்போது இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் கவனம் சர்வதேச கிரிக்கெட்டை நோக்கி திரும்பி உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் ஜூன் 7 ஆம் தேதி தொடங்குகிறது. இதில் ஆஸ்திரேலிய மற்றும் இந்தியா அணிகள் நேருக்கு சந்திக்க உள்ளனர். இதன் பிறகும் இந்திய அணி தொடர்ந்து அதிரடி அதிக போட்டிகளில் விளையாட உள்ளது. அதாவது வரும் அக்டோபர் – நவம்பரில் நடைபெற உள்ள ஒருநாள் உலகக் கோப்பை வரை இந்திய அணி எந்தெந்த தொடர் மற்றும் போட்டிகளில் பங்கேற்கப் போகிறது என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.

மேற்கிந்திய தீவுகளுக்கு இந்திய அணி சுற்றுப்பயணம்:
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடிய பிறகு சில நாட்கள் ஓய்வு எடுத்து இந்திய அணியினர், அதன் பின்னர் ஜூலை மாதம் மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்திய அணி மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இந்த சுற்றுப்பயணம் ஜூலை 12 முதல் ஆகஸ்ட் 13 வரை அதாவது 1 மாதம் வரை இருக்கும்.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர் இந்திய அணி முக்கியமான தொடராக இருக்கும் ஏனென்றால் அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான புள்ளிகள் அட்டவணையில் இந்திய அணி இடம் பிடிக்க சாதகமாக இருக்கும். இதன் காரணமாக தான் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் வெற்றி இந்தியாவிற்கு முக்கியமானதாக இருக்கும்,. அதேபோல ஒருநாள் மற்றும் டி20 தொடரில் பங்கேற்பதன் மூலம், வெஸ்ட் இண்டீஸ் அணியின் சாதகம் மற்றும் பாதகத்தை இந்திய வீரர்கள் புரிந்து கொள்ள முடியும். இதன்மூலம் உலகக் கோப்பைக்கான வியூகத்தை வகுக்க இந்திய அணிக்கு வாய்ப்பும் கிடைக்கும்.

அயர்லாந்து சுற்றுப்பயணம்:
வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் முடிந்த உடனேயே, இந்திய அணி 3 டி20 போட்டிகளில் விளையாட அயர்லாந்து செல்கிறது. இந்திய அணியின் அயர்லாந்து சுற்றுப்பயணம் இளம் திறமைசாலிகளுக்கு வாய்ப்பு கிடைக்க அதிக சான்ஸ் உள்ளது. ஐபிஎல் தொடரில் நன்றாக விளையாடிய வீரர்களுக்கு அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் விளையாட வாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிகிறது. அயர்லாந்து மற்றும் இந்தியா இடையிலான மூன்று டி20 போட்டிகளும் அயர்லாந்தில் நாட்டில் நடைபெறும்.

ஆசிய கோப்பை தொடர்:
ஆசிய கோப்பை ஒருநாள் போட்டி இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது. இது ஒரு மினி உலகக் கோப்பையாகவும் கருதப்படலாம். இந்தப் போட்டியில் இந்தியா உட்பட 6 அணிகள் பங்கேற்கும். ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்கும் அணிகள் 2 குழுக்களாக பிரிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவின் குழுவில் பாகிஸ்தானும் நேபாளமும் இடம்பெற்றுள்ளன. இரண்டாவது குழுவில் இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ளன. இரு குழுக்களில் இருந்தும் தலா இரண்டு அணிகள் சூப்பர் 4 ஐ அடையும். அங்கு அனைத்து அணிகளும் தங்களுக்குள் தலா 1-1 என்ற அடிப்படையில் விளையாடும். சூப்பர்-4ல் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு இடையே இறுதிப் போட்டி நடைபெறும். ஆசிய கோப்பைக்கான அட்டவணை இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

உலகக் கோப்பையைப் பொறுத்தவரை இந்தியாவுக்கு ஆசிய கோப்பை மிகவும் முக்கியமானதாக இருக்கும். இந்தப் போட்டியில் விளையாடுவது இந்தியாவிற்கு பல அணிகளில் விளையாடும் அனுபவத்தை அளிக்கும், மேலும் அணியின் பலம் மற்றும் பலவீனங்களைப் புரிந்துகொள்வது இந்திய அணி நிர்வாகத்திற்கு எளிதாக இருக்கும்.

ஆஸ்திரேலிய அணி இந்தியா வருகிறது:
உலகக் கோப்பைக்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணி செப்டம்பர் மாதம் இந்தியா வருகிறது. ஆஸ்திரேலியா இந்தியாவில் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. உலகக் கோப்பைக்கு முன்னதாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவது இந்தியாவுக்கு சாதகமாக இருக்கும். உலகின் தலைசிறந்த அணிகளில் ஆஸ்திரேலியாவும் ஒன்று, எனவே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றி என்பது இந்திய வீரக்ளுக்கு மேலும் உற்சாகத்தையும், மன பலத்தையும் அளிக்கும்.

ஐபிஎல் 2023க்குப் பிறகு இந்திய அணி விளையாடும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் முழு அட்டவணை:

ஜூன் 7 முதல் 11 வரை: இந்தியா vs ஆஸ்திரேலியா, ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி (இங்கிலாந்து)

ஜூலை-ஆகஸ்ட் 2023: இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ், 2 டெஸ்ட், 3 ஒருநாள், 5 டி20 (மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்கா).

செப்டம்பர் 2023: இந்தியா vs ஆஸ்திரேலியா, 3 ஒருநாள் (இந்தியா).

செப்டம்பர் 2023: இந்தியா vs ஆப்கானிஸ்தான், 3 ஒருநாள் (இந்தியா).

செப்டம்பர்-அக்டோபர் 2023: ஆசிய கோப்பை (அட்டவணை இன்னும் இறுதி செய்யப்படவில்லை)

அக்டோபர்-நவம்பர் 2023: ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை (இந்தியா).

நவம்பர் 2023: இந்தியா vs ஆஸ்திரேலியா, 5 டி20 (இந்தியா).

டிசம்பர் 2023 டூ ஜனவரி 2024: இந்தியா vs தென் ஆப்பிரிக்கா, 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 (தென் ஆப்பிரிக்கா)

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.