ஜம்மு: காஷ்மீரின் சம்பா பகுதியில் நேற்று அதிகாலையில் பாகிஸ்தான் பகுதியிலிருந்து இந்திய எல்லைக்குள் ஒருவர் ஊடுருவ முயன்றார்.
பாதுகாப்பு படையினரின் எச்சரிக்கையை மீறி அவர் எல்லைக் கட்டுப்பாட்டை தாண்டிச் செல்ல முயன்றார். இதையடுத்து பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அவரிடமிருந்து ரூ.450 மதிப்பிலான பாகிஸ்தான் கரன்சி நோட்டுகள் கைப்பற்றப்பட்டன. இத்தகவலை எல்லைப் பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.