குட் நியூஸ்: தமிழகம் முழுவதும் 4ஆம் தேதி முதல் "மாற்றுத்திறனாளிகளுக்கு சுயம்வரம்".!

தமிழகம் முழுவதும் ஜூன் நான்காம் தேதி முதல் 11 இடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு சுயம்வரம் நிகழச்சி நடைபெறவுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு மாற்றுத்திறனுடையோர் கூட்டமைப்பின் அறக்கட்டளை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

மாற்றுத்திறனாளிகள், ஏழைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டவர்களுக்கு தமிழ்நாடு மாற்றுத்திறனுடையோர் கூட்டமைப்பின் அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ கீதாபவன் அறக்கட்டளை இணைந்து கடந்த 11 ஆண்டுகளாக திருமணம் நடத்தி வருகிறது. 

இந்நிலையில், 12-வது ஆண்டாக தமிழகம் முழுவதும் 11 இடங்களில் சுயம்வர நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது. இதில் சுயம்வரமானது திருவாரூர் (ஜூன் 4), கடலூர் (ஜூன் 18), கோவை (ஜூன் 25), ஈரோடு (ஜூலை 2), விழுப்புரம் (ஜூலை 9), திருவண்ணாமலை (ஜூலை 15), வேலூர் (ஜூலை 23), அரியலூர் (ஜூலை 23), விருதுநகர் (ஆக.5), மதுரை (ஆக.6), சென்னை (ஆக.13) ஆகிய தேதிகளில் பதினொரு நகரங்களில் நடைபெறவுள்ளது.

இதில் தேர்வாகும் மாற்றுத்திறனாளி தம்பதிகளுக்கு செப்.9-ந் தேதி மருத்துவ கலந்தாய்வு நடத்தப்படும். அதைத் தொடர்ந்து நவம்பர் 19ஆம் தேதி திருமணம் நடத்தி வைக்கப்படும். மேலும் இதுகுறித்த கூடுதல் தகவல்களுக்கு www.tndfctrust.com என்ற இணையதள முகவரியில் அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.