அரபிக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தம் புயலாக தீவிரமடைவது உறுதி என வானிலை ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர்.
ஐரோப்பிய வானிலை மையம்அரபிக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தம் புயலாக மாற வாய்ப்புள்ளதாக ஐரோப்பிய வானிலை மையம் தெரிவித்திருந்தது. இந்த காற்றழுத்தம் தீவிரமடையும் பட்சத்தில் மேற்கு கடலோர இந்தியா, ஓமன் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இதன் தாக்கம் இருக்கும் என்றும் தெரிவித்திருந்தது.
ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் எம்பி செந்தில்குமார்… மாலத்தீவில் செம ஜாலி… போட்டோஸ்!புயல் உறுதிஐரோப்பிய வானிலை மையம் கூறியதையே ஜஎஃப்எஸ் எனும் குளாபல் போர்ஸ்கேஸ்டிங் சிஸ்டமும் தெரிவித்தது. பல தனியார் வானிலை ஆய்வாளர்களும் அரபிக் கடலில் புயல் உருவாக வாய்ப்பு அதிகம் என்பதை உறுதிப்படுத்தி வந்தனர். இந்நிலையில் இந்த காற்றழுத்தம் வரும் ஞாயிற்றுக்கிழமை அல்லது வரும் வாரத்தின் ஆரம்ப நாட்களில் வலுவடைய கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.
கவிதை மொழியில் இளையராஜாவை வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்!கேரளாவில் கனமழைஇதனால் கேரளாவில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தனியார் வானிலை ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர். மேலும் இந்த காற்றழுத்தம் அரபிக் கடலில் பெரிய புயலாக மாறும் என்றும் இந்த புயல் ஓமன் நோக்கி நகரும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் கணித்து வருகின்றனர்.
உறவாடிக் கெடுக்க பார்க்கிறார் டிகே சிவக்குமார்… தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை!பருவமழைக்கு முந்தைய மழைஇதனிடையே இன்னும் ஓரிருநாட்களில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் கேரளாவின் கடலோரா பகுதிகளில் ப்ரீ மான்சூன் மழை பெய்து வருகிறது. ஜூன் 1ஆம் தேதி தொடங்க வேண்டிய தென்மேற்கு பருவ மழை இந்த ஆண்டு தாமதமாகி உள்ளது. இருப்பினும் கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் ப்ரீ மான்சூன் மழை பெய்து பருவமழைக்கு முந்தைய அறிகுறியை காட்டி வருகிறது.
மீண்டும் மீண்டுமா… சென்னையில் நேற்றை விட இன்று அதிகமாக இருக்கும்… எச்சரிக்கும் தமிழ்நாடு வெதர்மேன்!தென்மேற்கு பருவமழைஇதேபோல் வட மாநிலங்களிலும் வெப்ப மண்ட புயலால் நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக ராஜஸ்தான் மாநிலத்தில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. பருவ மழைக்கு ஏற்ற சூழல் நிலவி வரும் நிலையில் அரபிக் கடலில் புயல் உருவாகும் சூழல் ஏற்பட்டிருப்பது தென்மேற்கு பருவமழையின் வருகையை உறுதிப்படுத்தியுள்ளது.
சீமான் டிவிட்டர் கணக்கு முடக்கப்பட இதுதான் காரணமா? பரபரப்பு தகவல்!வரலாமா?பெரிய புயல்