\"சமுத்திரக்கனி\"யின் மார்பை அறுத்து.. உறுப்புகளை சிதைத்து.. அந்த \"சொக்கனை\" காணோமாமே.. தேனி அதிர்ச்சி

தேனி: பால் கறப்பதற்காக, விடிகாலை நேரத்தில் கிராம மக்கள் சிலர் சென்றபோதுதான், சமுத்திரக்கனியை அந்த கோலத்தில் பார்த்துள்ளனர். என்ன நடந்தது தேனியில்?

ஆண்டிப்பட்டி தாலுகா கண்டமனூர் அடுத்துள்ளது பொன்னம்மாள் பட்டி.. இங்கு வசித்து வந்தவர் பெருமாள். இவரது மனைவி சமுத்திரக்கனி.. 48 வயதாகிறது.

இவர்களுக்கு ஒரு மகனும், 2 மகள்களும் இருக்கிறார்கள்.. பெருமாள் கடந்த 14 வருடங்களுக்கு முன்பே இறந்துவிட்டார்.. அதேபோல, இவர்களது மகனும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சாலை விபத்து இறந்துவிட்டார்..

சமுத்திரகனி: அதனால், 2 மகள்களையும் வளர்த்து கல்யாணம் செய்தது சமுத்திரகனிதான்.. முதல் மகளை பொன்னம்மாள் பட்டியிலும், 2வது மகளை காந்திபுரம் பகுதியிலும் திருமணம் செய்து தந்துள்ளார்.. இதையடுத்து, காந்திபுரம் பகுதியிலேயே சமுத்திரக்கனி, வாடகைக்கு வீடு எடுத்து அதில் தங்கி வருகிறார்.. இந்நிலையில் இன்று காலை சமுத்திரகனி அவருடைய வீட்டின் முன்பு சடலமாக கிடந்தார்.. உடம்பெல்லாம் ரத்தக்காயங்கள் கிடந்தன..

இன்று விடிகாலையில், பால் கறப்பதற்காக அங்குள்ளவர்கள் சிலர், அந்த வழியாக சென்றிருக்கிறார்கள்.. அப்போதுதான், சமுத்திரக்கனியின் சடலத்தை பார்த்து அலறினார்கள்.. உடனடியாக போலீசுக்கும் தகவல் பறந்தது… விரைந்து வந்த போலீசார் சமுத்திரக்கனியின் உடலை மீட்டனர்.. அப்போதுதான், அவரது உடம்பில் பல இடங்களில் வெட்டுக்காயங்கள் இருந்ததை கண்டனர். மார்பு பகுதி அரிவாளால் வெட்டப்பட்டிருந்தது.. அதேபோல, கை, கால்களிலும் மோசமான வெட்டுக்கள் காணப்பட்டன.

உடல் உறுப்புகள்: உடல் உறுப்புகள் சிதைந்த நிலையில், கிடந்த சமுத்திரகனியின் சடலத்தை, போலீசார் போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பி வைத்தனர்.. விசாரணையையும் துவங்கி உள்ளனர்.. அதே பகுதியைச் சேர்ந்த சொக்கர் என்ற நபர் மீது சந்தேகம் இருப்பதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.. இதனால், அவரை விசாரிக்கலாம் என்று போலீசார் முயன்றபோது, அவரை காணவில்லை என்கிறார்கள்..

அதனால் சந்தேகம் அவர்மீது அதிகரித்துள்ளதால், மாயமான சொக்கரை தேடும்பணி நடக்கிறது. மகள்களை வளர்ப்பதற்காக, பெட்டிக்கடை வைத்து பிழைப்பு நடத்தி வந்தாராம் சமுத்திரக்கனி.. காலையில் பால் கறப்பதற்காக அந்த வழியாக சென்றவர்கள் பார்த்தபோது, சமுத்திரக்கனிக்கு உயிர் இருந்திருக்கிறது.. அவரை மீட்டு, சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பியும் வைத்திருக்கிறார்கள்.- ஆனால் வழியிலேயே சமுத்திரக்கனி பரிதாபமாக உயிரிழந்ததாக சொல்கிறார்கள்..

சொக்கர் மாயம்: இந்த சொக்கர் என்பவருடன் சமுத்திரக்கனிக்கு கள்ளக்காதல் இருந்து வந்துள்ளதாக தெரிகிறது.. எனவே, கள்ளக்காதல் பிரச்சினையில் இந்தக் கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர். சொக்கனை காணவில்லை.. தேடி கொண்டிருக்கிறார்கள் தேனி போலீசார்.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.