சென்னை தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அறுதி பெரும்பான்மை பெற்று ஆட்சியைப் பிடித்து சித்தராமையா முதல்வராகவும், சிவக்குமார் துணை முதல்வராகவும் பதவி ஏற்றுள்ளனர். சிவக்குமாருக்கு நீர்ப்பாசனத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அவர் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் விரைவில் அணை கட்டப்படும் எனக் கூறியதற்குத் தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி இன்று வெளியிட்டுள்ள […]