தஞ்சாவூரில் இருசக்கர வாகனம் ஓட்டும் போது தலைக்கவசம் அணிந்து வந்த பெண்களுக்கு வெள்ளி நாணயம் பரிசளித்து போக்குவரத்து போலீசார் இன்ப அதிர்ச்சி கொடுத்தனர்.
நூறு சதவீதம் தலைக்கவசம் அணிவதை உறுதிப்படுத்தும் வகையில் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, பெண்கள் தலைக்கவசம் அணிவதை ஊக்கப்படுத்தும் வகையில் தஞ்சாவூர் பழைய பேருந்துநிலையம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார், தலைக்கவசத்துடன் வந்த பெண்களுக்கு வாழ்த்துக் கூறி பரிசளித்தனர்.
முறையாக ஹெல்மெட் அணிந்தவர்களுக்கு போக்குவரத்து போலீசார் கடந்த மாதம் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கிய நிலையில், அடுத்த மாதம் தங்க நாணயம் பரிசளிக்கப்போவதாக தெரிவித்துள்ளனர்.