சென்னை : பண்ணை வீட்டில் உன்னால் ஒன்னும் பண்ண முடியலன்னு ஆதங்கமா என்று நடிகைக்சுவை நடிகர் டெலிபோன் ராஜ், பயில்வான் ரங்கநாதனை கடுமையாக விளாசி உள்ளார்.
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருந்தவர் டெலிபோன் ராஜ். இவர் வடிவேலு குழுவுடன் அன்பு, குசேலன், 23ம் புலிகேசி போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இவர் முன்னால் டெலிகாம் பணியாளராக இருந்ததால், டெலிபோன் ராஜ் என தனது பெயரை மாற்றிக்கொண்டார்
டெலிபோன் ராஜ் : இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் ராஜ் பேட்டி ஒன்று அளித்திருந்தார். இதில், வடிவேலு குறித்து பலர் அவதூறாக பேசுகிறார்கள், அவருடன் சேர்த்து நடித்தவர்களே அவரை திட்டுகிறார்கள். அவர்கள் எல்லாருமே வடிவேலுவால் வளர்த்தவர்கள் தான். வடிவேலு இல்லை என்றால் இவர்கள் இல்லை. வடிவேவால் தான் நாம் வளர்ந்தோம் என்பதை மறந்துவிட்டார்கள். இவர்களுக்கு வடிவேலு போல் ஆகவேண்டும் என்று ஆசை இருக்கிறது. அது சகஜம்தான். அதற்காகத்தான் இப்படியெல்லாம் பேசுவது தவறு என்றார்.
பண்ணை வீட்டில் : மேலும், அண்மையில் யூடியூபில் பயில்வான் ரங்கநாதன் வடிவேலு குறித்து பேசியிருந்த வீடியோவை பார்த்தேன். அதில், இரவு 8மணி ஆனால், படப்பிடிப்பு நடந்து கொண்டு இருந்தாலும், நாளைக்கு பார்த்துக்கொள்ளலாம் என்று அங்கிருந்து கிளம்பி நேராக ஈசிஆர் பண்ணை வீட்டுக்கு தன்னுடன் சேர்ந்து நடித்த நடிகைகளுடன் சென்று விடுவார் என வடிவேலு குறித்து படுமோசமாக பேசியிருந்தார்.
பணத்திற்காக பேசுகிறார் : இதை கேட்கும் போது கோவமாகத்தான் வருகிறது, வடிவேலு யாரைக் கூட்டிக்கிட்டு பண்ணை வீட்டுக்கு போனால் இவருக்கு என்ன, அந்த பெண்ணை அழைத்து செல்ல அந்த நடிகரால் முடிகிறது, இவரால் பண்ணை வீட்டுக்கு யாரையும் அழைத்து செல்ல முடியவில்லை என்ற ஆதங்கத்தில் பேசுகிறாரா? பயில்வான் ரங்கநாதனால் ஒரு வசனத்தை கொடுத்தால் அதை பேசக்கூட தெரியாது. குடும்பத்திற்காக, யூடியூபில் பணத்திற்காக மனசாட்சியே இல்லாமல் கண்டதை பேசி வருகிறார் என்று நகைச்சுவை நடிகர் டெலிபோன் ராஜ் பயில்வானை மிகவும் கடுமையாக விமர்சித்து இருந்தார்.