பொண்ணு 5 ஆம் வகுப்பு..! மாப்பிள்ளை பொறியாளர்..! ஜோடியின் தூள் பறந்த ஆட்டம்..!

5 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்த கிராமத்து பெண்ணை மணந்த, சென்னை கார் நிறுவன பொறியாளர் ஒருவர், திருமணம் முடிந்த கையோடு மணமகளுடன் உறவினர்கள் மத்தியில் ஆட்டம் போட்டு தனது திருமணத்தை கொண்டாடினார்.

திருமணத்தன்று குனிந்த தலை நிமிராமல் மணமகளை அடக்கி வைத்த காலம் போயே போச்சி என்பதை போல ஆட்டம் போட்ட புதுமண தம்பதி இவர்கள் தான்..!

திருவாரூர் மாவட்டம் அக்கரைக் கோட்டகம் பகுதியைச் சேர்ந்த சேகர் – கொளஞ்சி தம்பதியினரின் மகன் விஜய். பொறியாளரான இவர் சென்னையில் உள்ள கார் நிறுவனம் ஒன்றில் தரக்கட்டுப்பாட்டு அலுவலராக உள்ளார். விஜய்க்கும் கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த வெள்ளையன் – மலர் தம்பதியினரின் மகள் அம்சவள்ளிக்கும் அக்கரைக்கோட்டகம் பகுதியில் உள்ள மழை மாரியம்மன் கோவிலில் திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்தவுடன் மணமகன் வீட்டில் திருமணத்திற்கு வந்திருந்தவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. உறவினர்கள் உணவு அருந்தி கொண்டிருந்த போது ஆச்சர்யம் அளிக்கும் வகையில் திடீரென மணமக்கள் ஜோடியாக நடனமாடத் தொடங்கினர்.

கல்யாண கோலத்தில் கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு புதுமண தம்பதிகள் போட்ட அட்டகாசமான ஆட்டத்தால் உற்சாகமடைந்த நண்பர்கள் மற்றும் உறவினர்களும் கத்தி கூச்சலிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

பொறியாளராக இருந்து கொண்டு 5 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்து விட்டு திருப்பூரில் வேலை செய்து வரும் பெண்ணை திருமணம் செய்கிறாயே சரியாக இருக்குமா ? என்ற நண்பர்களின் கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் அவர்கள் இருவரும் மனம் ஒன்றி போட்ட ஆட்டம் அமைந்தது

மணமகன் விஜயின் நண்பர்களால் எடுக்கப்பட்ட இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு தற்போது வைரலாக பரவி வருகிறது. மகிழ்ச்சியை கொண்டாட கோடிகளில் பணமோ அந்தஸ்தோ தேவையில்லை, மனசுக்கு பிடிச்சவங்களோட இப்படி ஒரு ஆட்டம் போதும் என்று நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

 

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.