போலீசார் முன்பு சாராமரியாகத் தாக்கிக் கொண்ட கும்பல் – காரணம் என்ன?
தமிழக- கேரளா எல்லைப் பகுதியில் உள்ள கோட்டைவாசல் கருப்பசாமி கோயிலுக்கு தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த சில நபர்கள் சாமி கும்பிடுவதற்காக வந்துள்ளனர். அதேபோல், தமிழக – கேரள எல்லை பகுதியை ஒட்டி அமைந்துள்ள தெற்கு மேடு என்கிற கிராமப் பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினரும் சாமி கும்பிடுவதற்காக வந்துள்ளனர்.
அப்போது, தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த சில வாலிபர்கள், அவர்களது காரில் சத்தமாக பாடல் சத்தத்துடன் ஆட்டம் போட்டுள்ளனர். அதனால், அந்தப் பகுதியில் பெரும் இரைச்சல் சத்தம் ஏற்பட்டதால், தெற்கு மேடு பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சென்று சத்தத்தை குறைத்து பாட்டு கேட்கும் படி தெரிவித்துள்ளனர். அப்போது இரு தரப்பினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இறுதியில் கைகளப்பில் முடிந்தது.
இதில் இரு தரப்பினரும் அருகே இருந்த விறகு கட்டைகளை எடுத்து மாறி, மாறி தாக்கிக் கொண்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து போலீசார் விரைந்து வந்தனர். ஆனால், அவர்கள் முன்பே இரு தரப்பினரும் மாறி மாறி தாக்கிக் கொண்ட நிலையில், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து போலீசார் சம்பவத்தை தடுத்து நிறுத்தி இரு தரப்பினர் மீதும் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே போலீஸார் முன்பே விறகு கட்டையால் ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கிக் கொண்டுள்ள சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.