மின்சார சபையின் நிதி கூற்றுத் தொடர்பான விசேட கலந்துரையாடல்

மின்சார சபையை மறுசீரமைப்புச் செய்யும் முறையில் மின்சார சபையின் நிதிக் கூற்றுத் தொடர்பான விசேட கலந்துரையாடல், மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவின் பங்குபற்றலுடன் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் நிகழ்நிலையில் (31) இடம்பெற்றது.

மின்சார சபையின் 2023 ஜூன் மாதத்துடன் நிதிக்கூற்றை மறுசீரமைப்பிற்கான திட்டம் சர்வதேச நாணய நிதியத்திற்கு முன்வைப்பதற்கு உடன்பாடு காணப்பட்டது.

அதற்கிணங்க உலக வங்கிப் பிரதிநிதிகள் மற்றும் சர்வதேச நாணயத்தின் பிரதிநிதிகள் இலங்கை மின்சார சபையுடன் இணைந்து மின்சார சபை பெற்றுள்ள சகல திட்டக் கடன், பெற்றோலியம் சட்டபூர்வ சங்கத்திற்கு செலுத்த வேண்டிய கடன், புத்தாக்க மற்றும் ஏனைய வழங்குனர்களுக்கு செலுத்த வேண்டிய கடன், அரச வங்கிகளில் பெற்றுள்ள கடன் மற்றும் ஏனைய கடன்களை மறுசீரமைப்பதற்கு 2023ஆம் ஆண்டில் ஏற்பட்ட நட்டயீடுகளை ஈடு செய்வதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

உலக வங்கியின் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் சிபாரிசு மற்றும் ஆலோசனைகளக்கு இணங்க மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சினால் மின்சார சபையின் நிதிக் கூற்றை மறுசீரமைக்கும் தந்திரோபாயத் திட்டம், அமைச்சரவையின் அனுமதிக்காக முன்வைப்பதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.