புவனேஸ்வர்: ஓடிசா மாநிலத்தில் பாலசோர் மாவட்டத்தில் 3 ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்குள்ளானதில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில்களில் பத்துக்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம் புரண்டுள்ளன. சில பெட்டிகள் முற்றிலும் சிதைந்து உருக்குலைந்து போயுள்ளது. அதில் பயணித்த பயணிகளின் கதி என்னவானது என்ற அச்சம் எழுந்துள்ளது. விபத்தில் 600க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கலாம் என ஒடிசா மாநில அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தின் பாலாசோர் அருகே சாலிமர் – சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சரக்கு ரயில் மீது மோதியதில் தடம்புரண்டது. இதில் கோரமண்டல் ரயிலின் இன்ஜின் உட்பட சுமார் 12 பெட்டிகள் சரிந்து, அடுத்திருந்த ரயில் தடத்தில் விழுந்தன. சற்று நேரத்தில், அந்த பக்கமாக வந்த யஷ்வந்த்பூர் – ஹௌரா துராந்தோ ரயில், கவிழ்ந்து கிடந்த கோரமண்டல் ரயிலின் பெட்டிகள் மீது மோதி தடம் புரண்டது. இதில் ஹௌரா ரயிலின் 4 பெட்டிகள் தடம்புரண்டு சரிந்தன.
விபத்து நிகழ்ந்த இடத்தில் பேரிடர் மீட்பு படையினரும், விமான படையினரும் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரே நேரத்தில் 2 பயணிகள் ரயிலும் சரக்கு ரயிலும் மோதியதில் கொடூரமான விபத்து நிகழ்ந்துள்ளது. நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்திருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
ஒடிசாவின் பாஹா நாகா பஜார் ரயில் நிலையம் அருகே ரயில்கள் மோதிய இந்த விபத்தில் பயணிகள் பலரும் சிக்கியுள்ளனர். கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏ1, ஏ2 பெட்டிகள் தரம் புரண்டன. B 2, B3, B4, B5, B6, B7, B8, B9 பெட்கள் தடம் புரண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
#WATCH | Visuals from the site of the train accident in Odisha’s Balasore district where two passenger trains and one goods train met with an accident leaving hundreds injured. Rescue operations underway at the spot pic.twitter.com/6EdGystBk3
— ANI (@ANI) June 2, 2023
விபத்து நிகழ்ந்த இடத்தில் இருந்து வீடியோ காட்சிகள் வெளியாகி வருகின்றன. ரயில் பெட்டிகள் முற்றிலும் சிதைந்து உருக்குலைந்து போயுள்ளது. அந்த பெட்டிகளில் பயணம் செய்த பயணிகளின் கதி என்னவானது என்பது பற்றிய அச்சம் எழுந்துள்ளது. விபத்து நிகழ்ந்த இடம் வனப்பகுதி என்பதாலும் நள்ளிரவு நேரமாகி விட்டதாலும் மீட்பு பணிகளில் சற்றே தொய்வு ஏற்பட்டது. நவீன கருவிகளைக் கொண்டு மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை 50க்கும் மேற்பட்ட மீட்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
600க்கும் மேற்பட்டோர் இதுவரை மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாக ஒடிசா மாநில தலைமைச்செயலாளர் அறிவித்துள்ளார். உயிரிழந்தவர்கள் பற்றிய தகவல்களை உறுதிப்படுத்த முடியவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.