உலகின் முன்னணி நடுத்தர மோட்டார் சைக்கிள் (250cc-750cc) தயாரிப்பாளரான ராயல் என்ஃபீல்டு நிறுவனம், மே 2023-ல் மொத்தம் 77,461 மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட 63,643 எண்ணிக்கை ஒப்பிடுகையில் 22 சதவீதம் அதிகரித்துள்ளது.
உள்நாட்டில் விற்பனை எண்ணிக்கை 70,795 ஆகவும், ஏற்றுமதி எண்ணிக்கை 6,666 ஆகவும் உள்ளது. முந்தைய ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பீடுகையில் 10,118 எண்ணிக்கையில் ஏற்றுமதி 34 சதவீதம் சரிவடைந்துள்ளது.
Royal Enfield sales report – May 2023
MOTORCYCLE SALES | May | YTD | ||||
---|---|---|---|---|---|---|
2023 | 2022 | Growth % | 2023’24 | 2022’23 | Growth % | |
Domestic | 70,795 | 53,525 | 32 | 1,39,676 | 1,07,377 | 30 |
Exports | 6,666 | 10,118 | -34 | 10,921 | 18,421 | -41 |
Total | 77,461 | 63,643 | 22 | 1,50,597 | 1,25,798 | 20 |
மே 2023 விற்பனை பற்றி ராயல் என்ஃபீல்டு தலைமை நிர்வாக அதிகாரி B.கோவிந்தராஜன் பேசுகையில், “ராயல் என்ஃபீல்டில், எங்களால் சிறப்பான வேகத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடிந்தது. ஹண்டர் 350 மிகச் சிறப்பாகச் செயல்பட்டு, ஒரே மாதத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு விற்பனையைப் பதிவு செய்திருக்கிறது. கடந்த மாதம் நாங்கள் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து சந்தையில் சூப்பர் மீட்டியோர் 650 மாடலை அறிமுகப்படுத்தினோம்.
சமீபத்தில் ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனம், ஐந்தாவது CKD முறை ஆலையை நேபால் நாட்டில் துவங்கியுள்ளது.