மல்யுத்த வீரர்களுக்கு இந்திய மல்யுத்த அமைப்பு தலைவரால் பாலியல் தொல்லை அளிக்கப்பட்டது சம்பந்தமாக அரசு விரைந்து முடிவு எடுக்க வேண்டும் என்று 1983ம் ஆண்டு கபில்தேவ் தலைமையில் உலகக் கோப்பை வென்ற கிரிக்கெட் அணியினர் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (WFI) தலைவர் பிர்ஜ் பூஷன் சரண் சிங்கை கைது செய்யக் கோரி போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீரர்கள் மே 28 அன்று, அனுமதியின்றி புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை நோக்கி பேரணியாகச் செல்ல முயன்றதாகக் […]