Amazon Home Shopping Sale: வீட்டு உபயோக பொருட்களின் விலையில் அதிரடி தள்ளுபடி

ஆன்லைன் ஷாப்பிங்கில் ஆர்வம் கொண்டவரா நீங்கள்? வீட்டு உபயோக பொருட்கள், வீட்டு அலங்காரப் பொருட்கள் என அனைத்தையும் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் நபரா நீங்கள்? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி காத்துக்கொண்டு இருக்கின்றது. அமேசானில் ஹோம் ஷாப்பிங் விற்பனை (Home Shopping Sale) ஜூன் 1 முதல் தொடங்கியுள்ளது. நான்கு நாட்கள் நீடிக்கும் இந்த விற்பனையானது ஹேவெல்ஸ், புளூ ஸ்டார், யுரேகா, பிஜியன் மற்றும் ப்ரெஸ்டீஜ் போன்ற புகழ்பெற்ற பிராண்டுகளில் அற்புதமான தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு கொண்டுவரும். அதாவது, தங்கள் வீட்டை முழுமையாகப் புதுப்பிக்கும் ஒரு சிறந்த வாய்ப்பை இந்த விற்பனை மூலம் வாடிக்கையாளர்கள் பெறப் போகிறார்கள். 

இந்த பொருட்களுக்கு தள்ளுபடி

ஜூன் 1 முதல் 4 வரை, வீட்டு அலங்காரப் பொருட்கள், வீட்டு மேம்பாடு, கோடை உபகரணங்கள், சமையலறை உபகரணங்கள், புல்வெளி (லான்) மற்றும் தோட்ட உபகரணங்கள், சுவர் அலங்காரம் ஆகியவற்றில் 70 சதவிகித தள்ளுபடி கிடைக்கும். இவை தவிர, மிக்சர் கிரைண்டர்கள், மின்விசிறிகள், வாக்யூம் கிளீனர்கள், சமையல் பாத்திரங்கள், பவர் டூல்ஸ், ஆட்டோ பொருட்கள், குளியலறை ஃபிட்டிங்ஸ் போன்றவற்றிலும் வாடிக்கையாளர்கள் 70 சதவீதம் தள்ளுபடி பெறலாம். இது தவிர, எஸ்பிஐ வங்கி கிரெடிட் கார்டில் ரூ.750 வரை உடனடி வங்கி தள்ளுபடியும், 1000 ரூபாய்க்கான குறைந்தபட்ச செலவில் ரூ.100 கூப்பனும் வழங்கப்படும்.

இந்த சலுகைகளை பயன்படுத்திக் கொள்ளலாம்

வீட்டு ஷாப்பிங் விற்பனையின் போது, ​​வெவ்வேறு பொருட்களுக்கு வெவ்வேறு தள்ளுபடிகள் கிடைக்கும். எடுத்துக்காட்டாக, மின்விசிறிகளுக்கு 45% வரை தள்ளுபடி கிடைக்கும். இதேபோல், தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரங்களுக்கு 40% வரை தள்ளுபடியும், வாக்கும் கிளீனர்களுக்கு 35% வரை தள்ளுபடியும் கிடைக்கும். சமையலறை மற்றும் டைனிங்கில் கிடைக்கும் சிறந்த சலுகைகளைப் பற்றி பேசினால், அமேசான் பயனர்கள் ஜூன் 1 முதல் 4 வரை சமையல் பாத்திரங்களை வாங்குவதற்கு 60% தள்ளுபடியைப் பெறலாம். 

பாட்டில்கள் போன்றவற்றில் 20% தள்ளுபடி, மேஜைப் பாத்திரங்களுக்கு (டேபிள்வேர்) 30% தள்ளுபடி கிடைக்கும். அதேசமயம், பாட்டில்கள் போன்றவற்றை வாங்கினால் ரூ.79 வரை சேமிக்கலாம். 

இவற்றிலும் தள்ளுபடி கிடைக்கும்

வீட்டு ஷாப்பிங் விற்பனையின் போது, ​​பர்னிச்சர் வாங்குவதற்கும் நல்ல தள்ளுபடி கிடைக்கும் என்று அமேசான் தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் மெத்தை வாங்கினால், அதில் 60% வரை தள்ளுபடி பெறலாம். இதேபோல், நாற்காலிகள் அல்லது மேசைகள், படுக்கைகள் மீது 60% வரை தள்ளுபடி கிடைக்கும். மேலும் சோபா செட்களுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும். 

வணிக தொழில்துறை மற்றும் குறிப்பிட்ட பொருட்கள் (BISS) தொடர்பான தயாரிப்புகளின் விற்பனையிலும் தள்ளுபடிகள் கிடைக்கும். இந்த விற்பனையில் வாடிக்கையாளர்கள் பவர் டூல்ஸை 60% மலிவான விலையில் வாங்கலாம். மருத்துவப் பொருட்களுக்கு 45% வரை தள்ளுபடியும், தெர்மல் பிரிண்டர்களுக்கு 40% தள்ளுபடியும், டீப் ஃப்ரீசர்களில் 50% வரை தள்ளுபடியும் இந்த விற்பனையில் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். 

அமேசான் சாப்பிங்

அமேசான் ஷாப்பிங் தளத்தில் வீட்டுக்கு தேவையான டிவி, குளிர்சாதன பெட்டி, ஏசி, ஏர் கூலர் போன்ற எலக்ட்ரானிக் பொருட்களும், முக அழகுக்கு தேவையான க்ரீம், சீரம், போன்றவைகளும், பெண்கள், ஆண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான விதவிதமான உடைகளையும் நமது விருப்பப்படி, கவர்ச்சிகரமான தள்ளுபடி விலைகளில் வாங்கி கொள்ளாலாம். ஆஃப்லைனில் நாம் வாங்கக்கூடிய பொருட்களை காட்டிலும் ஆன்லைனில் கவர்ச்சிகரமான தள்ளுபடிகள், பல கண்கவர் பொருட்கள், விதவிதமான தயாரிப்புகளை குறைவான விலையில் வாங்கிக்கொள்ள முடியும்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.