திருவனந்தபுரம் கன்னியாஸ்திரியை பலாத்காரம் செய்ததாக பாலியல் புகாரில் சிக்கிய, கேரளாவைச் சேர்ந்த பிஷப் பிரான்கோ முலக்கல், பஞ்சாப் மாநிலம் ஜலந்தரின் பிஷப் பதவியை ராஜினாமா செய்தார்.
கேரளாவைச் சேர்ந்த பிரான்கோ முலக்கல், ஜலந்தரின் பிஷப்பாக இருந்தார்.
கேரளாவுக்கு வந்தபோது, தன்னை பலமுறை அவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக, கன்னியாஸ்திரி ஒருவர் புகார் கொடுத்தார்.
இதையடுத்து, பிஷப் பதவியில் இருந்து, 2018ல் அவர் தற்காலிகமாக நீக்கப்பட்டார்.
இது தொடர்பான வழக்கை விசாரித்த கேரள நீதிமன்றம், பிஷப் முலக்கல் நிரபராதி என்று தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து, அந்த கன்னியாஸ்திரி, கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
கடந்த ஜனவரியில் கிறிஸ்துவர்களின் தலைவரான போப் பிரான்சிஸை, முலக்கல் நேரில் சந்தித்தார்.
அப்போது, ஜலந்தருக்கு புதிய பிஷப் நியமிக்கும் வகையில், தன் பதவியை ராஜினாமா செய்யும்படி அவர் அறிவுறுத்தியிருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஜலந்தர் பிஷப் பதவியை முலக்கல் நேற்று ராஜினாமா செய்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement