ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம், உள்நாட்டில் மொத்த விற்பனை எண்ணிக்கை 48,601 ஆக உள்ளது. மே 2022-ல் 42,293 எண்ணிக்கை 14.91% அதிகரித்துள்ளது. ஏப்ரல் 2023-ல் 49,701 எண்ணிக்கை பதிவு செய்து 2.21% சரிவடைந்துள்ளது.
இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய கார் தயாரிப்பாளரான ஹூண்டாய் நிறுவனம், புதிதாக எக்ஸ்டர் எஸ்யூவி காரின் அறிமுகத்தை ஜூலை 10 ஆம் தேதி மேற்கொள்ள உள்ளது.
Hyundai India Sales Report – May 2023
மே 2023 மாதாந்திர விற்பனை குறித்து ஹூண்டாய் மோட்டார் இந்தியாவின் சிஓஓ தருண் கார்க் கூறுகையில், “மே 2023 ஆரோக்கியமான இரட்டை இலக்க விற்பனை வளர்ச்சி எங்கள் எஸ்யூவி மாடல்களான ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் வென்யூ மூலம் பெற்றுள்ளோம். சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வெர்னா மீண்டும் பலமான எண்ணிக்கையை பெற்றுள்ளது, அதே நேரத்தில் விரைவில் வெளியிடப்படும் எங்களின் எக்ஸ்டர் எஸ்யூவி வாடிக்கையாளர்களிடையே உற்சாகத்தை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.