பாலக்காடு: அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக பிடிபட்டால், அவர்களை உடனே பணியிலிருந்து ‘டிஸ்மிஸ்’ செய்ய வேண்டும் என, கேரள லஞ்ச ஒழிப்புத்துறையினர், மாநில அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர்.
லஞ்ச ஒழிப்பு துறையின் இந்தப்பரிந்துரையில் கூறியிருப்பதாவது:லஞ்சம் வாங்கி பிடிபடும் அரசு ஊழியர்கள், மூன்று மாதங்களுக்கு ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்ட பின், மீண்டும் வேலையில் சேர்ந்து லஞ்சம் வாங்குவதாக நிறைய புகார்கள் வந்துள்ளன.
சமீபத்தில், பாலக்காடு மாவட்டத்தில், நில இருப்பு சான்றிதழுக்கு விண்ணப்பித்தவரிடம் லஞ்சம் வாங்கிய போது, கிராம கள உதவியாளர் சுரேஷ்குமார் கையும் களவுமாக பிடிபட்டார்.
இவரை சேவை விதிகளின்படி டிஸ்மிஸ் என்ற ஒழுங்கு நடவடிக்கையை எடுக்க வேண்டும். காரணம், இவர் மீது ஏற்கனவே லஞ்சம் வாங்கிய பல குற்றச்சாட்டுகள் உள்ளன.இதற்காக நடத்தப்பட்ட சோதனையில், இவரது வீட்டிலிருந்து, 1 கோடி ரூபாயும், 17 கிலோ எடையில் 5 ரூபாய், 10 ரூபாய் நாணயங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இவர் மூன்று மாத சஸ்பெண்டுக்குப் பின் மீண்டும் பணியில் சேர்ந்து லஞ்சம் வாங்கிஉள்ளார்.கடந்த 2022ல் 47 அரசு ஊழியர்களும், இந்த ஆண்டு இதுவரையில் 23 ஊழியர்களும் லஞ்சம் வாங்கி கையும் களவுமாக பிடிக்கப்
பட்டுள்ளனர்.தற்போது காவல் துறையில் தான், இம்மாதிரி குற்றங்களுக்கு டிஸ்மிஸ் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த நடவடிக்கையை மற்ற அரசு துறைகளிலும் அமல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அந்த பரிந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement