Joe Biden fell on stage | மேடையில் தவறி விழுந்த ஜோ பைடன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

கொலோராடோ,-அமெரிக்காவில் கொலோராடோ மாகாணத்தில் விமானப்படை அகாடமி இயங்கி வருகிறது. இந்த மையத்தின் பட்டமளிப்பு விழாவில், சிறப்பு விருந்தினராக அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் நேற்று பங்கேற்றார்.

சிறப்புரையாற்ற மேடை ஏறிய அவர், நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு அதிகாரிகள், அவருக்கு உதவ ஓடிச் சென்றனர். எனினும், யாருடைய உதவியும் இன்றி அவரே எழுந்து நடந்தார்.

இச்சம்பவம் குறித்து வெள்ளை மாளிகையின் செய்திப்பிரிவு இயக்குனர் பென் லாபோல்ட் குறிப்பிடுகையில், ”அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நலமுடன் உள்ளார். மேடையில் வைக்கப்பட்டிருந்த மணல் மூட்டை தடுக்கி அவர் கீழே விழுந்ததார். இதில் அவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை,” என்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.