Kamal Haasan:மாமன்னன் படம் பார்த்துவிட்டேன், முதல் விமர்சனத்தை வெளியிட்ட கமல்

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
Maamannan Audio Launch: இந்த மாதம் ரிலீஸாகவிருக்கும் உதயநிதி ஸ்டாலினின் மாமன்னன் படத்தை பார்த்துவிட்டு விமர்சனம் செய்திருக்கிறார் உலக நாயகன் கமல் ஹாசன்.

​மாமன்னன்​மாரி செல்வராஜ் இயக்கத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வைகைபுயல் வடிவேலு, ஃபஹத் ஃபாசில் உள்ளிட்டோர் நடித்திருக்கும் மாமன்னன் படம் இந்த மாதம் ரிலீஸாகவிருக்கிறது. இந்நிலையில் சென்னையில் இருக்கும் நேரு உள்விளையாட்டரங்கில் மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை நடந்தது. சிறப்பு விருந்தினராக உலக நாயகன் கமல் ஹாசன் கலந்து கொண்டார்.ரஷ்மிகா​பாலிவுட் அப்டேட் : Rashmika Mandanna Fly From Mumbai at Airport _ Rashmika Mandanna _​​கமல்​மாமன்னன் படத்தின் ட்ரெய்லரை வெளியிட்ட கமல் ஹாசன் கூறியதாவது, நான் ஏற்கனவே படத்தை பார்த்துவிட்டேன். அரசியல் பற்றி பேசும் நல்ல படம். உதயநிதி என் படத்தில் நடிக்க முடியவில்லையே என கவலை அடைந்தேன். ஆனால் அவர் மாமன்னன் படத்தில் நடித்ததில் மகிழ்ச்சி. இந்த படம் மாரி செல்வராஜ் வகை அரசியல் மட்டும் அல்ல உதயநிதி வகையான அரசியலும் பேசும் என்றார்.

​Kamal Haasan: இந்தியன் 2, கமல் பற்றி வேற லெவல் விஷயம் சொன்ன சித்தார்த்: ரொம்ப சந்தோஷம் ஆண்டவரே

​விமர்சனம்​உதயநிதி ஸ்டாலினின் மாமன்னன் படத்திற்கு கிடைத்திருக்கும் முதல் விமர்சனம் இது தான். அதுவும் சினிமா ஜாம்பவானான கமல் ஹாசனிடம் இருந்து நல்ல விமர்சனம் கிடைத்திருக்கிறது. அதனால் மாமன்னன் நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்பலாம். படத்திற்கு படம் வித்தியாசம் காட்ட நினைக்கிறார் கீர்த்தி சுரேஷ். அவரையும் கமல் ஹாசன் பாராட்டிப் பேசினார்.
​கீர்த்தி​இசை வெளியீட்டு விழாவில் பேசிய கீர்த்தி சுரேஷ் கூறியதாவது, மாமன்னன் ஒரு வித்தியாசமான படம். இதில் பெரிய நடிகர்களான வடிவேலு, ஃபஹத் ஃபாசில், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் இது எனக்கு கம்பேக் படம் என்று கூட சொல்லலாம். பல காலம் கழித்து என் நடிப்பில் ஒரு தமிழ் படம் ரிலீஸாகவிருக்கிறது என்றார்.

​நடிப்பு​மாமன்னன் படத்துடன் நடிப்புக்கு முழுக்கு போடப் போகிறேன் என்று தெரிவித்தார் உதயநிதி ஸ்டாலின். முழு நேரம் மக்கள் சேவை செய்ய விரும்பி அவர் இப்படியொரு முடிவை எடுத்தார். அண்ணா வேண்டாம் அண்ணா, தயவு செய்து உங்களின் முடிவை மாற்றிக் கொள்ளுங்கள். எங்களுக்காக தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்தார்கள். இந்நிலையில் தன் மனதை மாற்றிக் கொண்டிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.
​உதயநிதி ஸ்டாலின்​மாமன்னன் விழாவில் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு படங்களில் நடிக்கும் திட்டம் இல்லை. ஒரு வேளை மீண்டும் நடிக்க வேண்டும் என்கிற சூழல் உருவாகினாலோ அல்லது மக்களின் கோரிக்கையாலோ நான் மீண்டும் நடிப்பை துவங்குவேன். அப்படி நான் மீண்டும் நடிக்க வந்தால் அந்த படத்தை மாரி செல்வராஜ் தான் இயக்குவார் என்றார்.

​ஊர் கண்ணெல்லாம் உதயநிதி மேல தான்

​மகிழ்ச்சி​உதயநிதி ஸ்டாலினின் இந்த மனமாற்றம் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்திருக்கிறது. மக்கள் கோரிக்கை விடுத்தால் அல்ல ஏற்கனவே கோரிக்கை விடுத்துக் கொண்டு தான் இருக்கிறோம். அதனால் 3 ஆண்டுகள் பிரேக்கிற்கு பிறகு கண்டிப்பாக நடிக்க வர வேண்டும். நாங்கள் காத்திருப்போம் உதய்ணா என்கிறார்கள் ரசிகர்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.