கார்த்தி நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் ‘ஜப்பான்’ படம் உருவாகி வருகிறது. அண்மையில் இவர் வந்தியத்தேவனாக நடித்து ரிலீசான ‘பொன்னியின் செல்வன்’ இரண்டாம் பாகம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இந்நிலையில் கார்த்தி அடுத்தாக நடிக்கவுள்ள புதிய படம் குறித்த தகவல்கள் வெளியாகி சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
கடந்தாண்டு கார்த்தி நடிப்பில் தொடர்ச்சியாக மூன்று படங்களும் ஹாட்ரிக் ஹிட்டடித்தது. மல்டி ஸ்டார் படமாக இந்தப்படத்தை மணிரத்னம் இயக்கினார். ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தில் கார்த்தி வந்தியத்தேவனாகவும், விக்ரம் ஆதித்ய கரிகாலனாகவும், ஜெயம் ரவி அருள்மொழிவர்மனாகவும் நடித்திருந்தனர். இதன் இரண்டாம் பாகம் முதல் பாகம் அளவிற்கு வரவேற்பை பெறவில்லை.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
இந்நிலையில் கார்த்தி தற்போது ‘ஜப்பான்’ படத்தில் நடித்து வருகிறார். குக்கூ, ஜோக்கர், ஜிப்ஸி உள்ளிட்ட படங்களை இயக்கி விமர்சனரீதியாக வரவேற்பை பெற்ற ராஜு முருகன் தற்போது இந்தப்படத்தை இயக்கி வருகிறார். ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் ‘ஜப்பான்’ படம் தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட நான்கு மொழிகளில் உருவாகி வருகிறது.
தமிழ்நாட்டில் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்தப்படம் உருவாகி வருகிறது. கார்த்தியின் 25 படமான இதில் இம்மானுவேல், இயக்குனர் விஜய் மில்டன் மற்றும் பிரபல தெலுங்கு நடிகர் சுனில் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கும் ‘ஜப்பான்’ படம் தீபாவளி வெளியீடாக ரிலீசாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Thangalaan: விக்ரம் ஜாலியா இருக்காரு: ‘தங்கலான்’ பட வேறலெவல் அப்டேட் கொடுத்த பா. ரஞ்சித்.!
இந்நிலையில் கார்த்தி நடிக்கவுள்ள புதிய படம் குறித்த தகவல் வெளியாகி சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதன்படி கார்த்தியின் புதிய படம் ஒன்றை பிரேம்குமார் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த ’96′ படத்தை இயக்கியவர்.
மேலும் இந்தப்படத்தில் அரவிந்த்சாமி வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் இந்தப்படம் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ’96’ பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி நடிக்கவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமான எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
3 ஆண்டுகளுக்கு பிரேக்.. மக்கள் கையில் முடிவு: ‘மாமன்னன்’ பட விழாவில் உதயநிதி அதிரடி அறிவிப்பு.!