சென்னை : மாமன்னன் இசைவெளியீட்டு விழாவில் செய்தியாளர்கள் கேட்ட அந்த கேள்வியால் நடிகை கீர்த்தி சுரேஷ் கோபமடைந்தார்.
மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாமன்னன் படத்தில் வடிவேலு முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் நடித்துள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இத்திரைப்படம் இந்த மாதம் 29ந் தேதி வெளியாக உள்ளது.
கீர்த்தி சுரேஷ் : இந்நிலையில், மாமன்னன் திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியம் உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக வந்த கீர்த்தி சுரேஷ் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தமிழில் பல நாட்கள் கழித்து என்னுடைய படம் வெளியாகிறது. இதில் உதயநிதி,பகத் பாசில், மாமன்னன் வடிவேலு,மாரி செல்வராஜ் ஆகியோருடன் பணியாற்றியது மகிழ்ச்சியாக இருக்கிறது.
கம்யூனிஸ்டாக நடித்திருக்கிறேன் : மும்பையில் ஒரு விளம்பர படப்பிடிப்பை முடித்துவிட்டு வந்ததால் லேட் ஆகிவிட்டது. இன்னும் யாரையும் நான் பார்க்கவில்லை, இனி மேல் தான் அனைவரையும் பார்க்கவேண்டும். மாமன்னன் திரைப்படம் மொத்தமாக வேறு ஒரு படமாக இருக்கும். இது ஒரு வித்தியாசமான படம். நான் இந்த படத்தின் ஒரு கம்யூனிஸ்டாக நடித்திருக்கிறேன். பொதுவான ஒரு விஷயம் பற்றி தான் இந்த படம் பேசுகிறது இது படம் பார்க்கும் போது உங்களுக்கு புரியும் என்றார்.
டென்ஷனான கீர்த்தி சுரேஷ் : அப்போது ஒரு செய்தியாளர் திருமணம் எப்போது என்று கேட்க, ஏன் எனக்கு கல்யாணம் பண்ணி கொடுப்பதிலேயே இருக்கிங்க. எனக்கு திருமணம் என்றால் கண்டிப்பாக சொல்கிறேன் என்று செய்தியாளர்களிடம் சற்று கோவமாக பேசிவிட்டு, அடுத்த கேள்விக்கு கூலாக பதில் கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.
மகளை விட்டுவிடுங்கள் : நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் குறித்து பல வதந்திகள் பரவி வரும் நிலையில், கீர்த்தி சுரேஷின் தந்தை ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில், கீர்த்திக்கும் பர்ஹானுக்கும் திருமணம் நிச்சயம் கிடையாது. கீர்த்திக்கு திருமணம் நிச்சயமானதும் நானே அது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுகிறேன். அதுவரை கீர்த்தியின் திருமணம் குறித்த வதந்திகளை தயவு செய்து யாரும் பரப்ப வேண்டாம். மகள் குறித்து பரவுல் வதந்தியால் உளைச்சலில் இருக்கிறோம், என் மகளை விட்டுவிடுங்கள் வேதனையுடன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.