மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி, வடிவேலு, பகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘மாமன்னன்’.
இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற வருகிறது.
இவ்விழாவில் பேசிய நடிகர் உதயநிதி, “வடிவேலு சார் கதாபாத்திரம் தான் படத்தின் உயிர். என்னுடையக் கடைசி படம் என்று கூறி தான் மாரி செல்வராஜ், ரஹ்மான் சார், வடிவேலு சார், கீர்த்து சுரேஷிடம் டேட்ஸ் வாங்கினேன். அதன் பிறகு கமல் சார் தயாரிப்பில் நடிக்கப் போறேன் என தெரிந்த பின்பு மாரி செல்வராஜ் கோவப்பட்டார். படத்தை 110 நாட்கள் எடுத்து எடிட் செய்த பிறகு மீண்டும் மூன்று நாட்கள் ஷூட்டிங் போவோமா என்று கேட்டார். அதன் பிறகு மீண்டும் நேற்று இன்னும் ஒரு நாள் ஷூட்டிங் பண்ணலாமனு என்று கேட்டார். இந்த பஞ்சாயத்தை இசை வெளியீட்டு விழாவிற்கு பிறகு வைத்து கொள்வோம் என்று கூறினேன். 3 வருடங்களுக்குப் படம் நடிக்க வாய்ப்பில்லை. அதன் பிறகு நடித்தாலும் மாரி செல்வராஜ் இயக்கத்தில்தான் நடிப்பேன்.” என்று கூறியுள்ளார்.